राम
Tiruvāymoḻi
PDF

Book 9 · Decad 8

தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)

Tiruvāymoḻi 9.8 · pāsurams 37503760

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய் குறுக்கும் வகை உண்டுகொலோ கொடியேற்கே? (1)

For those whose thought is united with the mind that establishes him within the heart, deeds are severed. Is there any way for cruel me to approach sacred Nāvāy, surrounded by cool, fragrant flower-groves?

கொடி ஏர் இடைக் கோகனகத்தவள் கேள்வன் வடி வேல் தடம் கண் மடப் பின்னை மணாளன் நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய் அடியேன் அணுகப்பெறும் நாள் எவைகொலோ? (2)

He is husband of the lotus Lady with vine-slender waist and bridegroom of gentle Nappiṉṉai whose broad eyes are sharp as spears. On what day will I, his servant, be able to approach sacred Nāvāy, ringed by groves where the lofty Lord dwells?

எவைகொல் அணுகப் பெறும் நாள் என்று எப்போதும் கவையில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன் நவை இல் திருநாரணன் சேர் திருநாவாய் அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே (3)

“When, on what day, may I draw near?” I ask always, my mind admitting no second branch, my eyes spilling tears. I do not know the one day when I may enter sacred Nāvāy’s assembly, where faultless sacred Nārāyaṇa dwells.

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும் மீளா அடிமைப்பணி செய்யப் புகுந்தேன் நீள் ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய் வாள் ஏய் தடம் கண் மடப் பின்னை மணாளா (4)

I do not know the number of days allotted to me; yet I have entered service that never turns back. O bridegroom of gentle Nappiṉṉai with broad sword-bright eyes, dwelling in sacred Nāvāy surrounded by tall, abundant flower-groves!

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம் விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய் கண் ஆரக் களிக்கின்றது இங்கு என்றுகொல் கண்டே? (5)

He is bridegroom of the flower Lady and beloved of the Earth Maiden, the inner eye of every living being and every god in the world, and ruler of heaven. When will my eyes behold him here and rejoice to fullness in sacred Nāvāy, where he lovingly dwells?

கண்டே களிக்கின்றது இங்கு என்றுகொல் கண்கள் தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய் கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே? (6)

When will these eyes behold and rejoice here? I have come to exist without stain for service to you alone. O king of our cowherd lords, you have taken sacred Nāvāy, encircled by bee-filled flower-groves, as your abiding home.

கோ ஆகிய மா வலியை நிலம் கொண்டாய் தேவாசுரம் செற்றவனே திருமாலே நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ ஆஆ அடியான் இவன் என்று அருளாயே (7)

You took the land from Mahābali when he was king; you destroyed the asuras in the war of gods and asuras. Tirumāl, perfect Nārāyaṇa dwelling in Nāvāy—ah, show mercy and say, “This one is my servant.”

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன் அடிக் கீழ்ப் புக வைப்பாய் மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே தரு தென் திருநாவாய் என் தேவே (8)

Will you depart without grace? Show mercy, make your servant a treasure, and cause me to enter beneath your golden feet. My God of southern sacred Nāvāy, grant the clarity that establishes you in my heart without delusion.

தேவர் முனிவர்க்கு என்றும் காண்டற்கு அரியன் மூவர் முதல்வன் ஒரு மூவுலகு ஆளி தேவன் விரும்பி உறையும் திருநாவாய் யாவர் அணுகப் பெறுவார் இனி? அந்தோ (9)

Forever difficult for gods and sages to behold, he is the primal one of the three and sovereign of the single threefold world. Sacred Nāvāy is where the Lord delights to dwell. Alas, who now will be able to approach him?

அந்தோ அணுகப் பெறும் நாள் என்று எப்போதும் சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன் கொந்து ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய் வந்தே உறைகின்ற எம் மா மணி வண்ணா. (10)

“Alas, when will the day come when I may approach?” My thought is forever disturbed, and I call, “Tirumāl!” O our great jewel-hued one, you have come and dwell in sacred Nāvāy, encircled by groves of clustered flowers.

வண்ணம் மணி மாட நல் நாவாய் உள்ளானைத் திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன் பண் ஆர் தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வல்லார் மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே (11)

Upon him who dwells in fine Nāvāy of colorful jeweled mansions, Caṭakōpa of southern Kurukūr, ringed by massive walls, spoke these ten within his thousand musical Tamil verses. Those who master them will rule the earth and spread fragrance like jasmine.