राम
Tiruvāymoḻi
PDF

Book 9 · Decad 2

எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)

Tiruvāymoḻi 9.2 · pāsurams 36843694

பண்டை நாளாலே நின் திரு அருளும் பங்கயத்தாள் திரு அருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து பல்படிகால் குடிகுடி வழிவந்து ஆட்செய்யும் தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப்புளிங்குடிக் கிடந்தானே (1)

From ancient days, through your sacred grace and the grace of the Lotus Lady, your servants have come through family after family, generation after generation, sweeping your temple and performing service. Show them mercy: open your radiant mouth and look with lotus eyes, Lord reclining in sacred Puḷiṅkuṭi, amid cool fields by the clear-waved Porunal.

குடிக்கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த அடிமைக் குற்றேவல்செய்து உன் பொன் அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ ஒருநாள் படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் கொடிக்கொள் பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலை திருப்புளிங்குடிக் கிடந்தானே (2)

Your servants have lived in families, prospered, performed humble service in your sacred bondage, and come generation after generation without straying from your golden feet. Show them mercy: one day adorn my head with those lotus feet that rose to the measure of the earth, Lord reclining in sacred Puḷiṅkuṭi, ringed by cool fields, groves, and golden bannered walls.

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திருஉடம்பு அசைய தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் இடம் கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய் திருப்புளிங்குடிக் கிடந்தானே (3)

You have lain there since the day you reclined—but how much longer will you lie, making your sacred body ache? Show mercy to the servants who follow the ancient line of ceaseless service. Open your broad lotus eyes and rise; let you and your lotus Lady sit in grace while all three worlds that are your dwelling worship, Lord reclining at sacred Puḷiṅkuṭi.

புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தையகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே (4)

You recline at Puḷiṅkuṭi, sit in Varaguṇamaṅgai, and stand in Vaikuṇṭha. Rule me without ever leaving my clarified heart; grant me grace. Come so I may see your fruit-mouth glow red as coral against crystal-water cloud, while we dance and stand roaring until all three cool and glorious worlds marvel.

பவளம்போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம் தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய் பவள நன் படர்க்கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய் கவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய் சினப் பறவை ஊர்ந்தானே (5)

Come so I may see your ripe mouth redden like coral. Smile with moon-white pearl teeth and crawling rays; stand in grace with your sacred lotus eyes unfolding. You recline in cool sacred Puḷiṅkuṭi by the Porunal, where conches rest beneath fine spreading coral. To end the great elephant’s distress in the pond, you rode the fiercely wrathful bird.

காய் சினப் பறவை ஊர்ந்து பொன் மலையின் மீமிசைக் கார் முகில் போல மா சின மாலி மாலிமான் என்று அங்கு அவர் படக் கனன்று முன் நின்ற காய் சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப்புளிங்குடியாய் காய் சின ஆழி சங்கு வாள் வில் தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே (6)

Riding the wrathful bird, you resembled a dark cloud upon a golden mountain; blazing in anger, you confronted mighty Māli and Mālyavān and made them fall. Fierce king with radiant crown, Lord of field-rich sacred Puḷiṅkuṭi, you bear wrathful discus, conch, sword, bow, and mace to cut away our distress.

எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர் தமக்கும் ஆங்கு அனையாய் செம் மடல் மலருந் தாமரைப் பழனத் தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய் நம்முடை அடியர் கவ்வைகண்டு உகந்து நாம் களித்து உளம் நலம் கூர இம் மட உலகர் காண நீ ஒருநாள் இருந்திடாய் எங்கள் கண்முகப்பே (7)

You have cut away our distress here and rule me; you are the same kind of refuge to the immortals there. Lord reclining in cool sacred Puḷiṅkuṭi, amid lotus wetlands where crimson petals unfold, appear one day before our very eyes so that, delighting in the clamor of your servants, we may rejoice and our hearts flourish while this innocent world beholds.

எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணை அடி தொழுது எழுது இறைஞ்சி தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப திங்கள் சேர் மாடத் திருப்புளிங்குடியாய் திரு வைகுந்தத்துள்ளாய் தேவா இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒருநாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே (8)

Take your seat before our eyes while all the world worships your paired feet, rises and bows, filling its love to the brim and honoring you ever more excellently through the power of its words. Lord of moon-touched mansions in sacred Puḷiṅkuṭi, God within sacred Vaikuṇṭha, take a throne and dwell one day here too, within this great wide world.

வீற்று இடம்கொண்டு வியன்கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம் போற்றி ஓவாதே கண் இணை குளிர புது மலர் ஆகத்தைப் பருக சேற்று இள வாளை செந்நெலூடு உகளும் செழும் பனைத் திருப்புளிங்குடியாய் கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த கொடுவினைப் படைகள் வல்லானே (9)

Take your throne and dwell within this vast great world too, so we servants may praise without ceasing, cool our paired eyes, and drink your newly blossoming body. Lord of fertile sacred Puḷiṅkuṭi, where young vāḷai leap through red paddy in the mud, you wield cruel weapons and, becoming death, severed the asura clan at its root.

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய் கடு வினை நஞ்சே என்னுடை அமுதே கலி வயல் திருப்புளிங்குடியாய் வடிவு இணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல் அடியைக் கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் கூவுதல் வருதல் செய்யாயே (10)

Master of fierce weapons and deeds, you distress asuras so the immortals’ distress may end—deadly poison to them, nectar to me, Lord of field-rich sacred Puḷiṅkuṭi. Your tender feet are held by the peerlessly beautiful Lotus Lady and the other, Earth Lady. One day, either call cruelly deed-burdened me to hold them too, or come yourself.

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன் நா இயல் பாடல் ஆயிரத்துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள் ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான் அடி இணை உள்ளத்து ஓர்வாரே (11)

“Call me or come yourself!” Upon the one who churned the roaring sea, Caṭakōpa—lord of Pāṇḍya country beside the broad, abundant waters of the Porunal—lovingly composed a thousand tongue-born songs. Those who master these ten within them will contemplate without cease the paired feet that measured the three worlds.