राम
Tiruvāymoḻi
PDF

Book 8 · Decad 7

தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்

Tiruvāymoḻi 8.7 · pāsurams 36293639

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன் அடிக்கீழ் என்று அருத்தித்து எனைத்து ஓர் பல நாள் அழைத்தேற்கு பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து என் தன் கருத்தை உற வீற்றிருந்தான் கண்டு கொண்டே (1)

For many days I called in longing, crying in wonder, “Establish me beneath your golden feet forever.” Fitting Vāmana himself entered and sat firmly within the very heart of my thought. I beheld it.

இருந்தான் கண்டுகொண்டு எனது ஏழை நெஞ்சு ஆளும் திருந்தாத ஓர் ஐவரைத் தேய்ந்து அற மன்னி பெரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பெருமான் தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே (2)

I saw him abiding there. He wore away and utterly ended the five incorrigible rulers of my poor heart and established himself. I cannot now comprehend the grace that this great Lord—the one who showed mercy to the mighty-footed elephant—has given me.

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் இருள் தான் அற வீற்றிருந்தான் இது அல்லால் பொருள் தான் எனில் மூவுலகும் பொருள் அல்ல மருள் தான் ஈதோ? மாய மயக்கு மயக்கே? (3)

I can no longer comprehend the grace itself. He sat within me until my inner darkness ceased; beside this, even the three worlds are no real treasure. Is this delusion—or bewilderment born from wondrous illusion?

மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து ஆயன் அமரர்க்கு அரிஏறு எனது அம்மான் தூய சுடர்ச்சோதி தனது என் உள் வைத்தான் தேசம் திகழும் தன் திருவருள் செய்தே (4)

Unbewildered by illusion’s bewilderment, he deceived me: the cowherd, lion among immortals, my Master. Granting his sacred grace whose splendor shines throughout the lands, he placed his own pure, radiant Light within me.

திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார் புகழும் புகழ் தான் அது காட்டித் தந்து என் உள் திகழும் மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே? (5)

He gave his resplendent sacred grace, showed and granted the fame praised by the world, and stood shining within me like one luminous jewel-mountain. Is any other praised glory a treasure to me?

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத் தருமேல் பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரைபோல் திரு மார்பு கால் கண் கை செவ்வாய் உந்தியானே? (6)

If there exists another treasure surpassing himself in glory, let him give that to me—after giving himself, what remains for him to give anyone else? Upon the dark sapphire mountain, his sacred chest, feet, eyes, hands, red mouth, and navel bloom like lotuses.

செவ்வாய் உந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே (7)

Red mouth and navel, white teeth, and radiant earrings—each light advances and circles before every other. With that red mouth smiling, he abides inside my heart. Apart from that mouth, I know no other grace.

அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்கு உகந்து சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன் நெறியா வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரே (8)

I know no other grace. The Lord who rules me gives grace freely, delighting in those who act for him. He who carries all three worlds within the proper course of his belly came to remain within the thought of little me.

வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரும் எவரும் வயிற்றில் கொண்டு நின்று ஒரு மூவுலகும் தம் வயிற்றில் கொண்டு நின்றவண்ணம் நின்ற மாலை வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே (9)

Who else has taken him within and kept him there? Great Māl took the single threefold world and stood holding it within his own belly. With the power of thought, I have taken that Māl into my belly and established him there forever.

வைத்தேன் மதியால் எனது உள்ளத்து அகத்தே எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும் மொய்த்து ஏய் திரை மோது தண் பாற்கடலுளால் பைத்து ஏய் சுடர்ப் பாம்பு அணை நம் பரனையே (10)

With understanding I placed within the interior of my heart our supreme Lord, who lies in the cool Milk Ocean where massing waves collide, upon the bed of the hooded, radiant serpent. I will never grow weary and let him depart—never, at any time.

சுடர்ப் பாம்பு அணை நம் பரனை திருமாலை அடிச் சேர்வகை வண் குருகூர்ச் சடகோபன் முடிப்பான் சொன்ன ஆயிரத்து இப் பத்தும் சன்மம் விடத் தேய்ந்து அற நோக்கும் தன் கண்கள் சிவந்தே (11)

To show the way of reaching the feet of Tirumāl, our supreme Lord upon the radiant serpent-bed, Caṭakōpa of bountiful Kurukūr spoke these ten within the thousand he composed to bring his work to its crown. His eyes redden as he looks until birth itself wears away and vanishes.