राम
Tiruvāymoḻi
PDF

Book 8 · Decad 6

ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)

Tiruvāymoḻi 8.6 · pāsurams 36183628

எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர் செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே (1)

So that we rise remembering him by night and morning, he grants good graces to us alone and shows mercy. The dwelling of our Father, crowned with beautiful cool tulasī and water-lily flowers, is sacred Kaṭittāṉam, where the blessed live.

திருக்கடித்தானமும் என்னுடையச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் செருக் கடுத்து அன்று திகைத்த அரக்கரை உருக் கெட வாளி பொழிந்த ஒருவனே (2)

See: the Lord regards sacred Kaṭittāṉam and my thought as one and the same, and dwells within both together. He is the peerless one who once rained arrows until the arrogant, bewildered rākṣasas lost even their forms.

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கரந்து உள்ளும்தோறும் தித்திப்பான் திரு அமர் மார்வன் திருக்கடித்தானத்தை மருவி உறைகின்ற மாயப் பிரானே (3)

Standing as one, as two, and as a certain three, he hides his form and grows sweet whenever he enters within. The mysterious Lord whose chest is Śrī’s abiding place has approached sacred Kaṭittāṉam and made it his dwelling.

மாயப் பிரான் என வல்வினை மாய்ந்து அற நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான் தேசத்து அமரர் திருக்கடித்தானத்தை வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே (4)

At the words “mysterious Lord,” my fierce deeds vanished completely. In love he sought my heart as his country and settled there. He also took as his enduring temple fragrant-groved sacred Kaṭittāṉam, where radiant immortals gather.

கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம்; கோயில்கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே (5)

He made sacred Kaṭittāṉam his temple and, together with it, made my heart his temple. The pot-dancing Master, who made Vaikuṇṭha his sanctuary, is worshiped there by every deity who inhabits a temple.

கூத்த அம்மான் கொடியேன் இடர் முற்றவும் மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறை பூத்த பொழில் தண் திருக்கடித்தானத்தை ஏத்த நில்லா குறிக்கொள்மின் இடரே (6)

The dancing Master completely erased the distress of cruel me; Lord Madhusūdana dwells in cool sacred Kaṭittāṉam amid blossoming groves. Take this as your aim and praise it—distress will not remain.

கொள்மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன் மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து நண்ணு திருக்கடித்தான நகரே (7)

Take this into your heart so suffering may perish: Govinda’s radiant lotus feet measured the whole of earth and heaven. Sacred Kaṭittāṉam is the city mortals worship and the celestials themselves come near.

தான நகர்கள் தலைச்சிறந்து எங்கெங்கும் வான் இந் நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே ஆனவிடத்தும் என் நெஞ்சும் திருக்கடித் தான நகரும் தன தாயப் பதியே (8)

Everywhere there are sacred cities, each foremost in its place; sky, this earth, the ocean, and all the rest belong to our mysterious Lord. Yet among all the places that are his, my heart and the city sacred Kaṭittāṉam are his own hereditary estates.

தாயப் பதிகள் தலைச்சிறந்து எங்கெங்கும் மாயத்தினால் மன்னி வீற்றிருந்தான் உறை தேசத்து அமரர் திருக்கடித்தானத்துள் ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே (9)

Everywhere, foremost among all his inherited abodes, he has eternally taken his seat through wonder. Yet within sacred Kaṭittāṉam, where radiant immortals gather, dwells the wondrous one himself—the sovereign of cowherds.

அற்புதன் நாராயணன் அரி வாமனன் நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம் நல் புகழ் வேதியர் நான்மறை நின்று அதிர் கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே (10)

The wondrous one—Nārāyaṇa, Hari, Vāmana—chooses to stand and dwell within my heart and in sacred Kaṭittāṉam, its wish-fulfilling groves resounding as renowned Vedic masters recite the four Vedas.

சோலைத் திருக்கடித்தானத்து உறை திரு மாலை மதிள் குருகூர்ச் சடகோபன் சொல் பாலோடு அமுது அன்ன ஆயிரத்து இப் பத்தும் மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே (11)

Upon Tirumāl dwelling in grove-filled sacred Kaṭittāṉam, Caṭakōpa of walled Kurukūr spoke a thousand like milk blended with nectar. These ten will wondrously establish their reciters in transcendent Vaikuṇṭha.