राम
Tiruvāymoḻi
PDF

Book 8 · Decad 4

எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)

Tiruvāymoḻi 8.4 · pāsurams 35963606

வார் கடா அருவி யானை மா மலையின் மருப்பு இணைக் குவடு இறுத்து உருட்டி ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண்மேல் போர் கடா அரசர் புறக்கிட மாடம் மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே (1)

The elephant, a great mountain streaming rut like a waterfall—he snapped its twin tusk-peaks, rolled it over, and took its powerful mahout’s life; killed the wrestlers in the arena; left the encircling warrior-kings upon their backs; and shattered Kaṃsa high upon the gallery. That glorious little cowherd’s sacred Ciṟṟāṟu in Tiruccheṅkuṉṟūr is our refuge and destination.

எங்கள் செல்சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என் அப்பன் பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம் அருவன் செங்கயல் உகளும் தேம் பணை புடை சூழ் திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே? (2)

He is our refuge, the nectar we possess, Father of the immortals and my Father; the fitting three-formed one who creates, preserves, and dissolves the swelling three worlds, yet remains our formless one. Apart from the primal Lord seated at sacred Ciṟṟāṟu in Tiruccheṅkuṉṟūr, ringed by honeyed fields where red kayal leap, who else is my constant companion?

என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த எம் பெருமான் முன்னை வல் வினைகள் முழுது உடன் மாள என்னை ஆள்கின்ற எம் பெருமான் தென் திசைக்கு அணி கொள் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரை மீபால் நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண் நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே (3)

My abiding Lord, the immortals’ Lord, our Lord who raised the twofold earth, our Lord who rules me so all former cruel deeds perish at once—apart from the feet of our Lord standing upon the bank of sacred Ciṟṟāṟu in Tiruccheṅkuṉṟūr, ornament of the southern quarter, I cannot conceive another refuge.

பிறிது இல்லை எனக்கு பெரிய மூவுலகும் நிறையப் பேர் உருவமாய் நிமிர்ந்த குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என் அம்மான் செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடிஇணை அல்லது ஓர் அரணே (4)

I have no other. Our Lord was the little dwarf who rose into the vast form that filled the three great worlds; my Master is the beautiful sapphire who churned the roaring sea. Apart from our Lord’s paired feet, standing as truth to be known at sacred Ciṟṟāṟu in Tiruccheṅkuṉṟūr, ringed by dense clusters of plantain, areca, and coconut, there is no fortress.

அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை அது பொருள் ஆகிலும் அவனை அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது ஆதலால் அவன் உறைகின்ற நல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்த நறும் புகை விசும்பு ஒளி மறைக்கும் நல்ல நீள் மாடத் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே (5)

There is no other fortress apart from him. Whatever else may be called real, my soul cannot settle and cling to anything but him. Therefore sacred Ciṟṟāṟu is my good fortress, in Tiruccheṅkuṉṟūr of fine lofty mansions, where fragrant smoke banked in sacrifices by noble masters of the four Vedas obscures the sky’s light.

எனக்கு நல் அரணை எனது ஆர் உயிரை இமையவர் தந்தை தாய் தன்னை தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை தடம் கடல் பள்ளி அம்மானை மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் கனக்கொள் திண் மாடத் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே (6)

My good fortress, my insatiable life, father and mother of the immortals, the one whose nature is difficult even for himself to know, the Master reclining upon the broad ocean—I beheld him within sacred Ciṟṟāṟu in Tiruccheṅkuṉṟūr of massive, strong mansions, home to three thousand of heart-enchanting virtue, peers of generous Śiva, Brahmā, and himself.

திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்ட அத் திருவடி என்றும் திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்ய கையும் திருச் செய்ய கமல உந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய உடையும் திருச் செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ என் சிந்தையுளானே (7)

The sacred feet I beheld within sacred Ciṟṟāṟu in Tiruccheṅkuṉṟūr abide forever in my thought: red lotus eyes, red mouth, red feet and hands, sacred red lotus navel, red chest where the Lotus Lady dwells, crimson garment, sacred red crown, necklaces, and weapons—all shining within me.

திகழ என் சிந்தையுள் இருந்தானை செழு நிலத்தேவர் நான்மறையோர் திசை கைகூப்பி ஏத்தும் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங் கரையானை புகர் கொள் வானவர்கள் புகலிடம் தன்னை அசுரர் வன் கையர் வெம் கூற்றை புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும் படைப்பொடு கெடுப்புக் காப்பவனே (8)

He shines within my thought—the Lord upon sacred Ciṟṟāṟu’s bank in Tiruccheṅkuṉṟūr, where prosperous earthly gods and masters of the four Vedas fold hands and praise toward every quarter; refuge of the renowned celestials and fierce death to mighty-handed asuras. I know no way to praise the one who creates, guards, and dissolves all three fitting worlds.

படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே புகழ்வு இல்லை யாவையும் தானே கொடைப் பெரும் புகழார் இனையர் தன் ஆனார் கூரிய விச்சையோடு ஒழுக்கம் நடைப் பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே (9)

The one who creates, guards, and dissolves is Brahmā, the supreme beyond, and Lord Śiva himself. He enters between; no form is excluded; he has no end, and there is no praise apart from him, for he is everything. He is the Lord seated at sacred Ciṟṟāṟu in Tiruccheṅkuṉṟūr, where greatly generous, famous people live with keen learning, discipline, conduct, sacrifice, and natural virtue.

அமர்ந்த நாதனை அவர் அவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை அமர்ந்த தண் பழனத் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங் கரையானை அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை அமர்ந்தேனே (10)

I have embraced the settled Lord who becomes each being and grants each one fitting grace; the Master on sacred Ciṟṟāṟu’s bank in Tiruccheṅkuṉṟūr amid flourishing cool fields; husband and life of three thousand established Vedic priests, the gods upon earth—the abiding mysterious one, the three-eyed Lord, and the four-faced one.

தேனை நன் பாலை கன்னலை அமுதை திருந்து உலகு உண்ட அம்மானை வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை கோனை வண் குருகூர் வண் சடகோபன் சொன்ன ஆயிரத்துள் இப் பத்தும் வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே (11)

He is honey, fine milk, sugarcane, and nectar—the Master who perfectly swallowed the world, the mysterious one who created celestial four-faced Brahmā upon the cool flower blooming from his navel. Of the thousand generous Caṭakōpa of bountiful Kurukūr spoke upon this King, these ten raise their reciters to heaven by grace and end the vast wondrous dance of birth.