राम
Tiruvāymoḻi
PDF

Book 7 · Decad 7

எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்

Tiruvāymoḻi 7.7 · pāsurams 35193529

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம்கொலோ? அறியேன் ஆழி அம் கண்ண பிரான் திருக்கண்கள்கொலோ? அறியேன் சூழவும் தாமரை நாள் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் தோழியர்காள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே? (1)

Are they twin deaths come to consume the lives of helpless women? I do not know. Are they the sacred eyes of discus-bearing Lord Kaṇṇan? I do not know. See how they appear before me everywhere, like fresh lotus blossoms unfolding! Friends, mothers, what shall I do, tormented by sorrow?

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் என்னை நீர் நலிந்து என்? மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ? கொழுந்தோ? அறியேன்? ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளே மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே (2)

Mothers, what do you gain by standing there, driving and scolding me, and making me suffer? Is it a vine of the lofty wish-fulfilling tree, or its tender shoot? I cannot tell. The beautiful sacred nose of him who ate the gathered butter stands within my soul as the flame of a powerful lamp fixed there.

வாலியது ஓர் கனிகொல்? வினையாட்டியேன் வல்வினைகொல்? கோலம் திரள் பவளக் கொழும் துண்டம்கொலோ? அறியேன் நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய் ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே (3)

Is it a beautiful ripe fruit—or the cruel deed of deed-burdened me? Is it a luxuriant piece of perfectly shaped coral? I cannot tell. The toṇṭai-fruit mouth of the Master whose sacred body resembles a long blue cloud comes and appears in every direction my sweet life turns.

இன் உயிர்க்கு ஏழையர்மேல் வளையும் இணை நீல விற்கொல் மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலைகொல் மதனன் தன் உயிர்த் தாதை கண்ண பெருமான் புருவம்? அவையே என் உயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே (4)

Are they paired blue bows curving over helpless women to take their sweet lives? Are they the sugarcane bow of Love, whose glory endures? They are the brows of great Lord Kaṇṇan, father of Love’s own life; standing forever above my life, they strike it down.

என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக்கொல்? அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்கொலோ? அறியேன் குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும் ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்! எனக்கு உய்வு இடமே (5)

Is it white lightning, always shining in a red and fertile sky? Or is it a row of lovely pearls that destroys my life? I cannot tell. The smile of the Lord who lifted the mountain consumes my soul. Mothers, I know nothing—not even a place where I might survive.

உய்வு இடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும் எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல் பை விடப் பாம்பு அணையான் திருக் குண்டலக் காதுகளே? கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே (6)

Is it a pair of tender shoots where radiant makara ornaments flourish, asking, “What refuge can there be for helpless women, asuras, or rākṣasas?” They are the sacred, earring-adorned ears of him who reclines upon the hooded serpent. See how they assault me without ever letting go.

காண்மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன் நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலைகொல் சேண் மன்னு நால் தடம் தோள் பெருமான் தன் திரு நுதலே? கோள் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோள் இழைத்தே (7)

Mothers, look! I do not know how to show you. Is it the white moon that abides through the days, or a poisonous leaf for those who love? It is the sacred brow of the great Lord with four broad, exalted shoulders. Taking firm possession, it assails my soul and plots to seize the life of cruel me.

கோள் இழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் கோள் இழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும் கோள் இழையா உடைய கொழும் சோதிவட்டம் கொல் கண்ணன் கோள் இழை வாள் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றதே? (8)

Lotus with its perfect pattern, creeper, coral, bow, cool and flawless pearls, tender shoot, and the cool crescent in heaven—can this be a rich circle of radiance wearing every one of these forms? It becomes Kaṇṇan’s flawless, sword-bright face and takes the life of deed-burdened me.

கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழும் சுருளின் உள்கொண்ட நீல நல் நூல் தழைகொல்? அன்று மாயன் குழல் விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என் உயிரைக் கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்! கழறா நிற்றிரே (9)

Is it a flourishing mass of curls that tears apart the possessing darkness, with fine dark-blue threads growing deep within? No—it is the wondrous Lord’s hair. Fragrant with blooming cool tulasī, it comes and steals my life. Mothers, you do not understand how; you only stand and scold.

நிற்றி முற்றத்துள் என்று நெரித்த கையர் ஆய் என்னை நீர் சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச் சோதி மணி நிறம் ஆய் முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர் நசை என் நுங்கட்கே? (10)

“Stay within the courtyard!” you order, hands clenched, surrounding and hemming me in on every side. Mothers, my heart has made itself one with the radiant crown whose light spreads throughout all three worlds, upon the form of a brilliant, jewel-dark flame. What do you desire from me?

கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும் கட்கு அரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார் உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே (11)

Upon Kaṇṇan, difficult to behold even for Brahmā, Śiva, and Indra, Caṭakōpa of Kurukūr spoke a thousand endowed with inward power. Those who master these ten will remain forever among the mighty celestials and never disappear.