राम
Tiruvāymoḻi
PDF

Book 7 · Decad 5

எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்

Tiruvāymoḻi 7.5 · pāsurams 34973507

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நல் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே? (1)

Will those who learn choose any subject other than Lord Rāma? In the good city Ayodhyā he raised to the highest state every moving and unmoving being—without leaving out grass or the smallest ant—in this land brought forth by four-faced Brahmā.

நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே? (2)

Can those born in this land belong to anyone but Nārāyaṇa? Born here for humankind, he endured what none should endure, sought out and cut down the rākṣasas who oppressed the country, restored the realm, brought it salvation, and departed. Have they not heard this?

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ கேட்பார் செவி சுடு கீழ்மை வசைவுகளே வையும் சேண்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாள் பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே? (3)

Will listeners hear anything but Keśava’s fame? His ancient enemy Śiśupāla hurled low abuse that scorched every hearer’s ears, yet finally reached the Lord’s sacred feet. Once they know those who understand this truth, what else could they hear?

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ பன்மைப் படர் பொருள் ஆதும் இல் பாழ் நெடும் காலத்து நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி தன்னுள்ளே தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே? (4)

Can those who know his nature belong to anyone but him? During the vast, empty age when no manifold, spreading thing existed, he made the beneficent waters, made four-faced Brahmā, concealed primordial things within himself, and wondrously brought them forth. They have contemplated these designs.

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி சூழ்வரோ ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத் தாழப் படாமல் தன்பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட கேழல் திரு உரு ஆயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே? (5)

When people reflect upon his designs, will they consider anything but the mysterious Lord’s ankleted feet? The world had sunk into the deep, immense waters; taking the sacred form of a boar, he lifted it upon one tusk close to himself and would not let it remain fallen. They have heard and understood this.

கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ வாட்டம் இலா வண் கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு ஈட்டம்கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய கோட்டு அங்கை வாமனன் ஆய் செய்த கூத்துக்கள் கண்டுமே? (6)

Can those who hear and comprehend belong to anyone but Keśava? The celestials gathered and came begging for relief from mighty-handed Mahābali, whose generosity never waned, after he had opposed and afflicted them. They have seen the plays performed by the dwarf Vāmana, his hand extended for the gift.

கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ வண்டு உண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழும் நாள் இண்டைச் சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்ல கொண்டு அங்கு தன்னொடும் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே? (7)

Can those who have seen, understood, and learned belong to anyone but Kaṇṇan? Garlanded Mārkaṇḍeya, his flowers feeding bees, gained enduring life: the Lord took him together with the master whose crown bears tangled matted hair, went to deliberate, and brought him along into his own company. They have understood this.

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ எல்லை இலாத பெரும் தவத்தால் பல செய் மிறை அல்லல் அமரரைச் செய்யும் இரணியன் ஆகத்தை மல்லல் அரி உரு ஆய் செய்த மாயம் அறிந்துமே? (8)

Will those who perfectly comprehend it study anything but the glorious Lord’s greatness? Hiraṇya gained many powers through boundless and severe austerity and tormented the suffering immortals; the Lord became a mighty lion-form and worked his wonder upon the asura’s body. They know this mystery.

மாயம் அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்கு ஆய் தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே? (9)

Can those who know the wonder belong to anyone but the wondrous Lord? For the sake of the five, he made the hundred who contested their inheritance perish; before the whole country he went as their peerless charioteer, destroyed the army, and departed. They know this blessed account.

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை பேர்த்து பெரும் துன்பம் வேர் அற நீக்கி தன் தாளின்கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே? (10)

Can those who understand this account belong to anyone but the wondrous Lord? Birth that encloses us, disease, old age, and death—he drives all these away, uproots vast suffering, brings one beneath his feet, and bestows security. They have reflected and reached certainty.

தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும் தெளிவுற்ற கண்ணனைத் தென் குருகூர்ச் சடகோபன் சொல் தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர் தெளிவுற்ற சிந்தையர் பா மரு மூவுலகத்துள்ளே (11)

Upon lucid Kaṇṇan, who grants the way of bliss to those who stand clear-minded and undying, Caṭakōpa of southern Kurukūr spoke a thousand lucid verses. Those who master these ten will possess lucid minds throughout the three worlds embraced by song.