राम
Tiruvāymoḻi
PDF

Book 7 · Decad 3

தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)

Tiruvāymoḻi 7.3 · pāsurams 34753485

வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தி தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர் என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்? வெள்ளச் சுகம் அவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளைக் குழா விளையாட்டு ஒலியும் அறா திருப்பேரெயில் சேர்வன் நானே (1)

Mothers, behold how lotus-eyed Kaṇṇan, bearing curved white conch and discus, drives his bird straight through my heart—what words can I use to tell you? I shall reach Tiruppēreyil, where he sits amid a flood of delight and the sounds of Veda, festivals, children at play, and flocks of parrots never cease.

நானக் கருங் குழல் தோழிமீர்காள் அன்னையர்காள் அயல் சேரியீர்காள் நான் இத் தனி நெஞ்சம் காக்கமாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய் தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ் தென் திருப்பேரெயில் வீற்றிருந்த வானப் பிரான் மணிவண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே (2)

Fragrant, dark-haired friends, mothers, and women of the neighboring quarter: I cannot guard this solitary heart. It is no longer under my command; night and day it has gone to the red-fruit lips of sapphire-hued Kaṇṇan, heaven’s Lord, who sits in southern Tiruppēreyil amid cool fields and flower-groves thick with honeybees.

செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும் சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் திங்களும் நாளும் விழா அறாத தென் திருப்பேரெயில் வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ நாணும் நிறையும் இழந்ததுவே (3)

My heart has fastened upon his red-fruit lips and the fall of his long, flame-bright crown; it rejoices at conch and discus and is utterly undone by lotus eyes. Friend, for our Lord who sits in southern Tiruppēreyil, where festivals never cease through month or day, my heart has lost both modesty and restraint.

இழந்த எம் மாமைத்திறத்துப் போன என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் உழந்து இனி யாரைக்கொண்டு என் உசாகோ? ஓதக் கடல் ஒலி போல எங்கும் எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள் என்னை என் முனிந்தே? (4)

My heart went after the rich complexion I had lost, and remained there with it. Suffering now, whom can I send to inquire? In southern Tiruppēreyil, the noble Veda’s sound rises and swells everywhere like the roar of the surging sea. I have sunk into the mystery of him whose hand holds the resounding conch. Mothers, why be angry with me?

முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருது இடை போய் கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்? முன்னி அவன் வந்து வீற்றிருந்த கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே காலம்பெற என்னைக் காட்டுமினே (5)

In wrath he kicked the cart, drank at the phantom demoness’s breast, passed between the twin marutu trees, and hurled a calf at the ripened wood-apple. I have lost my womanly reserve to Lord Kaṇṇan. Mothers, what will anger accomplish now? While time remains, lead me to flower-rich Tiruppēreyil, where he chose to come and sit.

காலம்பெற என்னைக் காட்டுமின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால் நீல முகில் வண்ணத்து எம் பெருமான் நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான் ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த நான்மறையாளரும் வேள்வி ஓவா கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப்பேரெயிற்கே. (6)

Take me there while there is time, for love is greater than the ocean. Our cloud-blue Lord once came and stood before me, yet remained beyond my reaching hands. Lead me to water-girt Tiruppēreyil, where he came to sit upon earth, masters of the four Vedas never cease their sacrifices, and beautiful red paddy waves like yak-tail fans.

பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடி பேர்த்து வர எங்கும் காணமாட்டேன் ஆரை இனி இங்கு உடையம் தோழீ? என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது? என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே (7)

The Lord who destroyed southern Laṅkā, sea-bound and ringed by massive walls, came and settled in Pēreyil. I entered Pēreyil seeking my heart so that I might bring it back, but nowhere could I find it. Friend, whom do we have here now? No one can call my heart home. Whom can I employ, and what can I achieve? What my heart beheld, that alone have I beheld.

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி கார்க் கடல் வண்ணனோடு என் திறத்துக் கொண்டு அலர் தூற்றிற்று அது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே (8)

Everyone gathered around what they had seen and began spreading slander about dark-ocean-hued him and me. Friend, if I tried to tell the love I embraced from that moment, it would exceed the solid earth, the seven seas, and the vast sky. I will go and reach southern Tiruppēreyil, where clear waves encircle his seat.

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள் அன்னையர்காள் என்னைத் தேற்ற வேண்டா நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை கார்வண்ணன் கார்க் கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான் வந்து வீற்றிருந்த ஏர் வள ஒண் கழனிப் பழன தென் திருப்பேரெயில் மாநகரே. (9)

I will go and join him, my friends. Mothers, do not try to console me. What use are your words in this matter? Neither my heart nor my constancy remains with me here. The great southern city Tiruppēreyil is all lustrous fields, fertile wetlands, and beauty; there cloud-dark Lord Kaṇṇan, who swallowed the ocean-girt world, has come and taken his seat.

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள் சிகர மணி நெடு மாடம் நீடு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவரை அன்று மங்க நூற்ற நிகர் இல் முகில்வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே? (10)

I will search cities, countries, and every other place; friends, I have no shame left. In southern Tiruppēreyil, where lofty mansions rise with jeweled peaks, sits the mysterious one with long makara earrings. He once schemed to make the hundred perish—the peerless cloud-hued discus-bearer who stole my heart and became my sovereign for all time.

ஊழிதோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும் ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப்பேரெயில் மேய பத்தும் ஆழி அங்கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத்திறத்து ஆழியாரே. (11)

Age after age his forms, names, and deeds differ as he guards the world. Upon that ocean-water-hued Acyuta, Caṭakōpa of beautiful Kurukūr spoke a matchless thousand in linked antāti. These ten dwell upon Tiruppēreyil. Those able to praise the discus-handed Lord through them will plunge deeply into the condition of service to him.