राम
Tiruvāymoḻi
PDF

Book 7 · Decad 2

திருவரங்கப் பெருமானிடம் தலைவி மிகவும் மோகித்திருப்பதைக் கண்ட தாய் அரங்கரைப் பார்த்து வினாவுதல் (திருவரங்கம்)

Tiruvāymoḻi 7.2 · pāsurams 34643474

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும் எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு? என்னும் இரு நிலம் கை துழா இருக்கும் செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே? (1)

Night and day she knows no sleep; with her hands she casts away the tears from her eyes. “Conch and discus!” she cries with folded hands, and faints repeating, “Lotus eyes!” “How can I live apart from you?” she asks, raking both the earths with her hands. Lord of Śrīraṅgam’s waters where red kayal fish leap, what are you doing to her?

என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா? என்னும் கண்ணீர் மல்க இருக்கும் என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்? என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும் முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா தகுவதோ? என்னும் முன் செய்து இவ் உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் என்கொலோ முடிகின்றது இவட்கே? (2)

“What are you doing, my lotus-eyed Kaṇṇan?” she asks, sitting with eyes overflowing. “What can I do, Lord of wave-tossed Śrīraṅgam?” she cries, breathing fiery sigh after sigh and melting. “You do not appear because of my former deeds. Cloud-hued one, is that fitting?” You once swallowed, released, and measured this world—what end is approaching for her?

வட்கு இலள் இறையும் மணிவண்ணா என்னும் வானமே நோக்கும் மையாக்கும் உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனே என்னும் உள் உருகும் கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே என்னும் திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் இவள்திறத்து என் செய்திட்டாயே? (3)

Without the least shame she cries, “Sapphire-hued one!” and, gazing into the sky, grows bewildered. “Peerless one who consumed the lives of all the fearsome asuras!” she says, melting within. “Invisible one, grant that I may see you—Kakutstha, Kaṇṇan!” Lord of Śrīraṅgam encircled by stout, bannered walls, what have you done to her?

இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும் கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் கடல்வண்ணா கடியைகாண் என்னும் வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்று என்றே மயங்கும் சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய் இவள்திறத்து என் சிந்தித்தாயே? (4)

She sits with foot where it was placed and hand where it fell; then rises, wanders in confusion, and folds her hands. “Love is anguish,” she gasps and swoons. “Ocean-hued one, see how cruel you are! Round-edged discus in your right hand—come!” she repeats in delirium. Perfect one of water-rich Śrīraṅgam, what did you intend for her?

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் திருவரங்கத்துள்ளாய் என்னும் வந்திக்கும் ஆங்கே மழைக்கண் நீர் மல்க வந்திடாய் என்று என்றே மயங்கும் அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே அலை கடல் கடைந்த ஆர் அமுதே சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே (5)

She reflects, searches every direction, grows certain, and folds her hands: “You dwell within Śrīraṅgam.” She worships there, raincloud eyes brimming, and wanders in delusion crying, “Come!” “You tore the asura’s body at twilight; you are rich nectar churned from the wave-filled sea.” You bewitched the maiden resolved to meet and reach your refuge.

மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும் மா மாயனே என்னும் செய்ய வாய் மணியே என்னும் தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும் வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல் என்னும்; பை கொள் பாம்பு அணையாய் இவள்திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே (6)

“He bewildered me and stole my heart,” she says. “Great mystery! Jewel with crimson lips! You dwell in Śrīraṅgam ringed by cool waters. First of heaven, bearing fierce sword, mace, conch, discus, and bow!” Lord reclining on the hooded serpent, show her mercy—that alone is what sinful I can do.

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் பற்றிலார் பற்ற நின்றானே கால சக்கரத்தாய் கடல் இடம் கொண்ட கடல்வண்ணா கண்ணனே என்னும் சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் என் தீர்த்தனே என்னும் கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே (7)

“You fashioned childhood’s sorrows and delights. You stand as the attachment of those without attachment. You are the wheel of time, ocean-hued Kaṇṇan who took the sea as his dwelling. You dwell in Śrīraṅgam, encircled by cool waters where fish swim—my purifier!” So says my tender shoot of a daughter, her lovely great eyes filling with dew.

கொழுந்து வானவர்கட்கு என்னும் குன்று ஏந்தி கோ நிரை காத்தவன் என்னும் அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே என்னும் எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன்? என்னும் செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் என் செய்கேன் என் திருமகட்கே? (8)

“Tender shoot of the celestials! He lifted the mountain and protected the cattle.” She weeps, worships, and breathes fiery, burning sighs. “Kohl-dark one!” Rising, she stares upward without blinking: “Where can I look for you?” Lord of Śrīraṅgam, ringed by broad and abundant waters, what shall I do for my sacred daughter?

என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடை ஆவியே என்னும் நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே என்னும் அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே என்னும் தென் திருவரங்கம் கோயில்கொண்டானே தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே (9)

“Your chest is joined to my sacred Lady; you are my very life. You are the husband of Earth, whom you raised and claimed with your holy tusk. You embraced and subdued the seven bulls to win the cowherd maiden, and are her beloved.” Lord who made southern Śrīraṅgam your temple, I cannot discern my daughter’s end.

முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும் மூவுலகு ஆளியே என்னும் கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும் நான்முகக் கடவுளே என்னும் வடிவு உடை வானோர் தலைவனே என்னும் வண் திருவரங்கனே என்னும் அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே (10)

“I know no conclusion for her,” she says; then, “Ruler of the three worlds! Lord with matted hair fragrant with koṉṟai! Four-faced God! Chief of the beautiful celestials! Bountiful Lord of Śrīraṅgam!” As if she had never reached them, she drew near—and attained the cloud-hued one’s feet.

முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல் துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் முகில்வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப் பத்தும் வல்லார் முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே (11)

Caṭakōpa of bountiful Kurukūr—lord of pure, cloth-blue waters on the bank of the swelling Porunal, encircled by fertile groves—reached the cloud-hued Lord’s feet, wore his grace, and was saved. Those who master these ten of his thousand-word garland upon those feet will dwell amid immortals in cloud-blue heaven, within a flood of supreme bliss.