राम
Tiruvāymoḻi
PDF

Book 6 · Decad 8

திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்

Tiruvāymoḻi 6.8 · pāsurams 34203430

பொன் உலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ நல் நலப் புள்ளினங்காள் வினையாட்டியேன் நான் இரந்தேன் முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில்வண்ணன் கண்ணன் என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே. (1)

Will you rule the golden world—or rule the whole earth? Noble, gracious birds, I, a woman ruled by my deeds, implore you: tell my condition to the Lord who has taken my well-being, cloud-hued Kaṇṇan who fashioned all the worlds in the beginning.

மை அமர் வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ கை அமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு மெய் அமர் காதல் சொல்லி கிளிகாள் விரைந்து ஓடிவந்தே (2)

Parrots, quickly fly back after seeing my fruit-lipped Lord with the discus seated in his hand, and tell him of the love that dwells within my very body. Then, before long sword-eyed maidens darkened with collyrium, you may sit upon my hand and feast each day on sweet rice rich with ghee and milk.

ஓடிவந்து என் குழல்மேல் ஒளி மா மலர் ஊதீரோ கூடிய வண்டினங்காள் குருநாடு உடை ஐவர்கட்கு ஆய் ஆடிய மா நெடும் தேர்ப்படை நீறு எழச் செற்ற பிரான் சூடிய தண் துளவம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே (3)

O bees gathered in a swarm, after your pure honey-mouths drink from the cool tulasī worn by the Lord who mounted the great, towering chariot for the five rulers of Kuru-land and reduced the opposing army to rising dust, will you race back and breathe upon the radiant flowers in my hair?

தூ மது வாய்கள் கொண்டுவந்து என் முல்லைகள்மேல் தும்பிகாள் பூ மது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்து அகன்ற மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு யாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே? (4)

O dragonflies, if you leave the jasmine upon my breast to drink flower-honey elsewhere, behold the celestials’ king, crowned with cool tulasī overflowing with noble nectar, who deceived and abandoned me, a woman ruled by her deeds. Ask him, “Is this fitting conduct toward us?” Then demand whatever reward you wish.

நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள் வெம் கண் புள் ஊர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த செங்கண் கருமுகிலை செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு? என்மினே (5)

Come, parrots I raised; I have something to tell you. Riding the fierce-eyed bird, he came and stole the heart of deed-burdened me. Wherever he has gone, find that red-eyed dark cloud, red-lipped and bountiful as the wish-fulfilling tree, and ask him, “Is this just?”

என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன் தன் மன்னு நீள் கழல்மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் கல்மின்கள் என்று உம்மை யான் கற்பியாவைத்த மாற்றம்சொல்லி செல்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே (6)

“My dark, great Lord, my Kaṇṇan with the flashing thread upon his chest, will grant the cool tulasī from his enduring, lofty feet to none but us.” Learn these words I have taught you and go speak them, little pūvai birds raised by a woman of cruel deeds.

பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன் யாவையும் யாவரும் ஆய் நின்ற மாயன் என் ஆழிப் பிரான் மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி பாவைகள் தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே? (7)

His hue resembles the pūvai flower; his eyes are lotuses. He stands as every thing and every being—the mysterious one, my discus-bearing Lord. Tell my message to Madhusūdana, who split the horse’s powerful mouth. Little maidens, can you end the desolate pallor of me, a woman ruled by her deeds?

பாசறவு எய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன் ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே அருள்செய்து ஒருநாள் மாசு அறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே (8)

Already cut loose from every bond, I, deed-burdened, will languish for an age. O white heron with flawless wings, show compassion just once: behold the celestials’ king, stainless blue radiance crowned with light, and tell him, “She turns to no other; apart from you, the blameless one, she has no gaze.”

பேர்த்து மற்று ஓர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன் நீர்த் திரைமேல் உலவி இரை தேரும் புதா இனங்காள் கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல் வந்திருந்தே (9)

I, a woman ruled by deeds, have utterly no other protector. O flocks of waterbirds who roam above the ripples seeking prey, behold Kaṇṇan, king of the celestials, like a vast mass of storm cloud. Graciously carry my words to him, then return at dawn and remain here with his reply.

வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீரும் எல்லாம் அந்தரம் ஒன்றும் இன்றி அலர்மேல் அசையும் அன்னங்காள் என் திரு மார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்மின் என்று மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர் மறுமாற்றங்களே (10)

O swans who sway upon blossoms with your jewel-bright mates, resting together without the slightest space between you, tell my Śrī-chested Lord in secret, as though imparting a mantra, “See her—this is what she has become.” Then come speak his answering words.

மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடிமேல் நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார் ஊற்றின்கண் நுண் மணல் போல் உருகாநிற்பர் நீராயே (11)

Having carefully shaped these messages upon the feet of Lord Madhusūdana, Caṭakōpa of Kurukūr, encircled by fragrant flower-groves, spoke them among his thousand manifestations. Those who master these ten will stand melting into water like the fine sand within a spring.