राम
Tiruvāymoḻi
PDF

Book 6 · Decad 2

தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்

Tiruvāymoḻi 6.2 · pāsurams 33543364

மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் மன் உடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அதுகொண்டு செய்வது என்? என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ (1)

Wonder-worker who burned the fortress of sovereign Laṅkā, I tremble before those lightning-waisted women who wear your favor. I know your little stratagems now—what can you accomplish with them? Perfect Lord, return my ball and anklets, and go.

போகு நம்பீ உன் தாமரைபுரை கண் இணையும் செவ்வாய் முறுவலும் ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம் தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார் செவி ஓசை வைத்து எழ ஆகள் போகவிட்டு குழல் ஊது போயிருந்தே (2)

Go, perfect Lord. Were we born only to be undone by the turmoil made by your paired lotus eyes, red lips, and smile? Peacock-graceful women wait eagerly to wear your favor and hear the voice of your flute. Drive the cattle out, play for them, and remain there.

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ நின் செய்ய வாய் இருங் கனியும் கண்களும் விபரீதம் இந் நாள் வேய் இரும் தடம் தோளினார் இத் திருவருள் பெறுவார் எவர்கொல் மா இரும் கடலைக் கடைந்த பெருமானாலே? (3)

Go elsewhere and tell your falsehoods to those who do not know your cunning, perfect Lord. Today your red, ripe-fruit lips and those great eyes have become dangerous. Which bamboo-shouldered woman will receive this sacred favor from the supreme Lord who churned the vast ocean?

ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு அன்று நீ கிடந்தாய் உன் மாயங்கள் மேலை வானவரும் அறியார் இனி எம் பரமே? வேலின் நேர் தடம் கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே (4)

Once you swallowed the seven worlds and lay upon the long banyan leaf; even the high gods cannot comprehend your wonders. What are you to us now, supreme one? You are adept at standing amid the games of broad-eyed cowherd girls, their glances sharp as spears, while tending the herd. Do not scold me.

கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் திண் சக்கர நிழறு தொல் படையாய் உனக்கு ஒன்று உணர்த்துவன் நான் மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே (5)

Do not rebuke us, perfect Lord: earth and heaven know your deceit well. Ancient warrior shaded by the mighty discus, let me teach you one thing. While honey-voiced girls with childlike speech languish for your favor, do not amuse yourself with our babbling pūvai bird and parrot.

குழகி எங்கள் குழமணன்கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை பழகி யாம் இருப்போம் பரமே இத் திரு அருள்கள்? அழகியார் இவ் உலகம் மூன்றுக்கும் தேவிமை ஈதகுவார் பலர் உளர் கழகம் ஏறேல் நம்பீ உனக்கும் இளைதே கன்மமே (6)

There is no purpose in turning playful, taking our little jewel, and behaving possessively. We have long been familiar with you, supreme one—is this your sacred grace? Many beautiful women are fit to reign as queens over all three worlds. Do not enter our circle, perfect Lord; such conduct is demeaning even for you.

கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட நின்மலா நெடியாய் உனக்கேலும் பிழை பிழையே வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அது கேட்கில் என் ஐம்மார் தன்ம பாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே (7)

It is no worthy deed to snatch the doll from our hands. Stainless, lofty Lord who swallowed the ocean-bound earth, even when it is yours, a fault remains a fault. You tease us with forceful words; if my brothers hear, they will not pause to ask whether striking you is righteous or sinful—one day there will be a quarrel of raised sticks.

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர் கணக்கு இல் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய் இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை உணக்கி நீ வளைத்தால் என் சொல்லார் உகவாதவரே? (8)

You set all things and beings in conflict, distinguish them without confusion, yet remain undivided—the radiant embodiment of wisdom, flooded with immeasurable fame. Our friends called, “Come, let us play,” and we came out to join them. If you detain and torment us here, what will those who dislike us say?

உகவையால் நெஞ்சம் உள் உருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின் அக வலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால் தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாம் அடு சிறு சோறும் கண்டு நின் முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே (9)

Through desire you melt our hearts within and cast us into the secret net of your broad lotus glances. Then you destroy things with your sacred feet! You showed no kindness to our little houses or the tiny meals we cooked. Could you not simply have stood smiling, your luminous face shining upon them?

நின்று இலங்கு முடியினாய் இருபத்தோர் கால் அரசு களைகட்ட வென்றி நீள் மழுவா வியன் ஞாலம் முன் படைத்தாய் இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய கருமாணிக்கச் சுடர் நின்தன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே (10)

Crowned in splendor, you wielded the long, victorious axe and uprooted twenty-one generations of kings; in the beginning you fashioned this vast world. Now, a flame like a dark sapphire, you have appeared to redeem this cowherd clan—yet we cowherd girls will forever suffer affliction at your hands.

ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டு அழு கூத்த அப்பன் தன்னை குருகூர்ச் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும் நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே (11)

Once the cowherd mother grew angry over the stolen butter, and the dancing Father wept beneath her chastisement. Caṭakōpa of Kurukūr praised him in a musical garland of a thousand Tamil verses. Those who voice these ten with melody upon their tongues will never know want.