राम
Tiruvāymoḻi
PDF

Book 6 · Decad 1

திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல் (திருவண்வண்டூர்)

Tiruvāymoḻi 6.1 · pāsurams 33433353

வைகல் பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் செய் கொள் செந்நெல் உயர் திருவண்வண்டூர் உறையும் கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு கைகள் கூப்பி சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே (1)

O flocks of herons who come each dawn to feed in the flower-filled lagoons, go to prosperous Tiruvaṇvaṇḍūr, where red paddy rises high. Behold my fruit-lipped Lord with the discus in his hand; fold your wings like joined palms and tell him of the love borne by me, a woman ruled by her past deeds.

காதல் மென் பெடையோடு உடன் மேயும் கரு நாராய் வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர் நாதன் ஞாலம் எல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே (2)

O dark cranes who graze beside your gentle, beloved mates, in cool Tiruvaṇvaṇḍūr the sound of Vedic sacrifice resounds. Seek our Lord there—the sovereign who swallowed every world. Worship his feet with folded wings and tell him what has befallen this servant of his.

திறங்கள் ஆகி எங்கும் செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள் சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூர் உறையும் கறங்கு சக்கரக் கைக் கனிவாய்ப் பெருமானைக் கண்டு இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே (3)

O many kinds of birds roaming together through all the fields, descend before the fruit-lipped Lord whose hand bears the whirling discus, dwelling in Tiruvaṇvaṇḍūr where surpassing riches abound. Bow to him with compassion and report the distress of his servant.

இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட அன்னங்காள் விடல் இல் வேத ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர் கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே (4)

O innocent swans who join your mates and sport immersed in untroubled delight, find Kaṇṇan, the Great Māl whose body is ocean-dark, in cool Tiruvaṇvaṇḍūr where the unceasing Veda rings aloud. Make him understand: one woman’s body wastes away, and she melts for him.

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட அன்னங்காள் திணர்த்த வண்டல்கள்மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர் புணர்த்த பூந் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே (5)

O tender swans who understand lovers’ estrangement and reconciliation and then feed together, go to Tiruvaṇvaṇḍūr, where conches gather upon the heaped sands. See our Lord crowned with a woven garland of cool, flowering tulasī; join your wings and offer him homage on my behalf as well.

போற்றி யான் இரந்தேன் புன்னைமேல் உறை பூங் குயில்காள் சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண்டூர் உறையும் ஆற்றல் ஆழி அங்கை அமரர் பெருமானைக் கண்டு மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வது ஒருவண்ணமே (6)

I praise and entreat you, lovely cuckoos dwelling in the punnai trees. In Tiruvaṇvaṇḍūr, where vāḷai fish leap from the mire, behold the immortals’ Lord, the mighty discus resting in his palm. Graciously bring back some word from him—the one means by which this bewildering love may end.

ஒருவண்ணம் சென்று புக்கு எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திருவண்வண்டூர் கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால் செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே (7)

Go straight in, bright parrot, and bring me a word. In Tiruvaṇvaṇḍūr, encircled by radiant flower-groves beside the crimson sea, look carefully for these signs: a dark form, red lips, gracious eyes, ruddy hands and feet, and the splendid battle-discus and conch. Tell that Lord of me.

திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய் ஒண் சிறு பூவாய் செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண்வண்டூர் பெரும் தண் தாமரைக்கண் பெரு நீள் முடி நால் தடந்தோள் கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே (8)

O beautiful little pūvai bird, discern him truly and bring me a word: my Master in cool Tiruvaṇvaṇḍūr, ringed by cerunti, ñāḻal, makiḻ, and punnai groves. His great eyes are cool lotuses, his crown is lofty, his four shoulders broad, and his sacred body resembles a dense, dark raincloud.

அடிகள் கைதொழுது அலர்மேல் அசையும் அன்னங்காள் விடிவை சங்கு ஒலிக்கும் திருவண்வண்டூர் உறையும் கடிய மாயன் தன்னை கண்ணனை நெடுமாலைக் கண்டு கொடிய வல்வினையேன் திறம் கூறுமின் வேறுகொண்டே (9)

O swans who sway upon the blossoms, worship the Master with folded wings. In Tiruvaṇvaṇḍūr, where conches sound at daybreak, behold that formidable wonder-worker—Kaṇṇan, the Great Māl. Take him aside and tell him privately of me, burdened by fierce and cruel deeds.

வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன் வெறி வண்டினங்காள் தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர் மாறு இல் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே (10)

I have singled you out and beg you, swarms of bees drunk on fragrance. North of the clear-flowing Pampā stands Tiruvaṇvaṇḍūr. Tell its triumphant hero—he who rejoiced after reducing the invincible rākṣasa’s ramparts to dust—that I too still exist.

மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய் அகல் ஞாலம் கொண்ட வன் கள்வன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு இன்கொள் பாடல் வல்லார் மதனர் மின்னிடை யவர்க்கே (11)

The mighty thief became a dwarf wearing the radiant sacred thread and measured the broad worlds; upon his feet Caṭakōpa of Kurukūr composed a musical thousand. Those who master these ten sweet songs addressed to Tiruvaṇvaṇḍūr will appear as Love himself to women whose slender waists flash like lightning.