ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள் இருள் ஆய்
நீர் எல்லாம் தேறி ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்
பார் எல்லாம் உண்ட நம் பாம்பு அணையான் வாரானால்
ஆர் எல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே? (1)
The whole village sleeps, the whole world has become midnight darkness, every water has grown still; night stretches into one immense night. If our serpent-couch Lord who swallowed the earth does not come, alas, who now will guard this hard-karmic woman’s life?
ஆவி காப்பார் இனி யார்? ஆழ் கடல் மண் விண் மூடி
மா விகாரம் ஆய் ஓர் வல் இரவு ஆய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே நீயும் பாங்கு அல்லையே. (2)
Who now will guard my life? Deep ocean, earth, and sky are covered; night becomes one vast, terrible transformation and lengthens. If my kāyā-flower-hued Kṛṣṇa does not come, sinful heart, even you are no companion.
நீயும் பாங்கு அல்லைகாண் நெஞ்சமே நீள் இரவும்
ஓயும் பொழுது இன்றி ஊழி ஆய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே (3)
Heart, see—you too are no companion. The long night lengthens into an age without a moment of ending. If my Kākutstha of the scorching, mighty bow does not come, born a woman and burdened by hard karma, I do not even know how to die.
பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் இம் மண் அளந்த
கண் பெரிய செவ்வாய் எம் கார் ஏறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே? (4)
The radiant sun has hidden and will not come, as though saying, “I cannot watch the great suffering women endure.” If our broad-eyed, red-mouthed dark bull who measured the earth does not come, who can cure my measureless disease of thought?
ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே (5)
Who will examine and care for me? Mothers and friends sleep through the long night without asking, “What has become of you?” If our cloud-bodied Kṛṣṇa does not come, my name will not die; it stands behind this hard-karmic woman.
பின்நின்று காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால்
முன்நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் இடத்தே? (6)
Following behind, the sickness of love beats hard against my heart; before me, age-long night has closed and covered my eyes. If our eternal discus-bearing Māyā-Lord does not come, who in this place can guard the long life that still remains?
காப்பார் ஆர் இவ் இடத்து? கங்கு இருளின் நுண் துளி ஆய்
சேண் பாலது ஊழி ஆய் செல்கின்ற கங்குல்வாய்த்
தூப் பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப் பால வல்வினையேன் தெய்வங்காள் என் செய்கேனோ? (7)
Who can guard me here? The dark night moves as a fine drop, becoming an age across the distant sky. If the Lord of pure milk-white conch and discus does not appear, gods, what can I—burning with cruel karma—do?
தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழி ஆய்
மெய் வந்து நின்று எனது ஆவி மெலிவிக்கும்
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தைவந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே (8)
Gods, what can I do? One night has truly come and stands as seven ages, weakening my life. If my Kṛṣṇa whose practiced hand bears the discus does not come, even the cool breeze that gently touches me beats like blazing fire.
வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளி ஆய்
அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்
செஞ் சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார்? நின்று உருகுகின்றேனே (9)
It strikes like blazing fire; swollen darkness advances as minute drops, and the lovely tall chariot of the hot, splendid sun does not appear. If the wealthy Lord of red-radiant lotus eyes does not come, who can end the heart’s distress? I stand melting.
நின்று உருகுகின்றேனே போல நெடு வானம்
சென்று உருகி நுண் துளி ஆய் செல்கின்ற கங்குல்வாய்
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்று ஒருகால் சொல்லாது உலகோ உறங்குமே (10)
As I stand melting, the long sky seems to melt and pass drop by drop through the mouth of night. Though the Lord who once measured the world does not come, the world sleeps without uttering a single word even once.
உறங்குவான் போல் யோகுசெய்த பெருமானை
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ? (11)
Śaṭhakopa of grove-ringed Kurukūr spoke this colorful decad within a thousand linked verses upon the Great Lord who practices yoga as though asleep. Having mastered it, how could anyone die and fail to reach Vaikuṇṭha?