மாசு அறு சோதி என் செய்ய வாய் மணிக்குன்றத்தை
ஆசு அறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம்?
ஏசு அறும் ஊரவர் கவ்வை தோழீ என் செய்யுமே? (1)
Friend, seeking my stainless Radiance, red-mouthed sapphire mountain, faultless in nature and primordial Form, I have reached attachment’s end and lost understanding. How many days can I remain? What can the village’s ceaseless slander do?
என் செய்யும் ஊரவர் கவ்வை தோழீ இனி நம்மை?
என் செய்ய தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி
என் செய்ய வாயும் கருங் கண்ணும் பயப்பு ஊர்ந்தவே (2)
Friend, what can the village’s slander do to us now? My red-lotus-eyed Kṛṣṇa has taken my completeness. My former complexion gone, body grown thin, even my red mouth and dark eyes have become covered in pallor.
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய்முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்
தீர்ந்த என் தோழீ என் செய்யும் ஊரவர் கவ்வையே? (3)
The red-mouthed Lord whose feet kicked the rolling cart and tasted the demoness’s breast has taken my completeness. Wherever I go or return, I have no word apart from him. Faithful friend, what can the village’s slander do?
ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த
கார் அமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே (4)
Village gossip became manure and mother’s speech became water; sowing the wet seed, they raised a vast field in my heart. Our cloud-bodied Kṛṣṇa, cruel friend, ripened great, deathless love until it resembles the sea.
கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட
அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே
துடி கொள் இடை மடத் தோழீ அன்னை என் செய்யுமே? (5)
He is hard, cruel—the long Māl whose foot possessed the worlds, wonder-worker with a body beyond understanding. Even so, alas, my cruel heart lies crying only “He!” Drum-waisted innocent friend, what can mother do?
அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே (6)
What if mother does anything? What if the village says anything, friends? I no longer desire your protection—I am caught in the net of sapphire-hued Vāsudeva, king of generous Dvārakā and primordial Lord of immortals.
வலையுள் அகப்படுத்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு
அலை கடல் பள்ளி அம்மானை ஆழிப்பிரான் தன்னை
கலை கொள் அகல் அல்குல் தோழீ நம் கண்களால் கண்டு
தலையில் வணங்கவும் ஆம் கொலோ தையலார் முன்பே? (7)
Friend with ornamented broad hips, my good heart called and trapped me in the net of the Lord reclining on the wave-filled sea, the Lord of the discus. Will our eyes see him and our heads bow in worship before all the women?
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருது இடை
போய் முதல் சாய்த்து புள் வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந் நாள்கொலோ
யாம் உறுகின்றது தோழீ அன்னையர் நாணவே? (8)
He drank the demoness’s breast, sprang upon the cart, passed between the twin trees and felled them, split the bird’s mouth, and struck down the elephant—the Lord of pure smile and red tōṇṭai-fruit lips. Friend, when shall we join him and leave our mothers ashamed?
நாணும் நிறையும் கவர்ந்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு
சேண் உயர் வானத்து இருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ உலகுதோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே (9)
Taking my modesty and reserve, my good heart called and went to the Lord of gods in the high, distant heaven. Friend, I vow: spreading scandal through every world, performing every improper act, I shall mount the palmyra horse like an untamed mare.
யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரான் உடை
தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
ஆம் மடம் இன்றி தெருவுதோறு அயல் தையலார்
நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே (10)
We shall ride the palmyra horse and wear the pure-petaled, cool, lovely tulasī flowers of our Lord whose beautiful hand bears the discus. Casting off fitting maidenly restraint, let neighboring women in every street pour out tireless blame until the whole land roars.
இரைக்கும் கருங் கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம் (11)
Śaṭhakopa of Kurukūr amid fragrant groves composed this full-linked decad within a thousand linked verses on ocean-dark, roaring Lord Kṛṣṇa. For those able to recite it, every place they inhabit becomes Vaikuṇṭha.