राम
Tiruvāymoḻi
PDF

Book 4 · Decad 9

உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்

Tiruvāymoḻi 4.9 · pāsurams 32113221

நண்ணாதார் முறுவலிப்ப நல் உற்றார் கரைந்து ஏங்க எண் ஆராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை கண்ணாளா கடல் கடைந்தாய் உன கழற்கே வரும் பரிசு தண்ணாவாது அடியேனைப் பணி கண்டாய் சாமாறே (1)

What kind of world-nature is this, making strangers smile while good kin melt and yearn, producing sorrows beyond counting? Compassionate churner of the ocean, see that this servant’s longing to reach your ankleted feet never cools; receive my service before I die.

சாம் ஆறும் கெடும் ஆறும் தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகு இயற்கை ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு அணையாய் அம்மானே கூமாறே விரைகண்டாய் அடியேனை குறிக்கொண்டே (2)

People successively meet dying and destruction; their own kin fall upon them, lie deceived, and cry—what world-nature is this? I know no way through it, Lord upon the serpent couch. Mark this servant, hurry to the place of my cry, and call me.

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும் வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய உயிர் மாய்தல் கண்டு ஆற்றேன் உலகு இயற்கை! கடல்வண்ணா அடியேனைப் பண்டேபோல் கருதாது உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே (3)

Celebrated lineage, family honor, friends, kin, accumulated treasure, and the flower-haired wife are left behind as life disappears. I cannot bear seeing the nature of the world. Ocean-hued Lord, do not treat me as before; call me to your feet and receive my service.

கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு ஆக கொள் என்று தமம் மூடும் இவை என்ன உலகு இயற்கை வள்ளலே மணிவண்ணா உன கழற்கே வரும்பரிசு வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே (4)

Great wealth leaps up crying “Take me,” only to become consuming fire; darkness closes over one crying “I shall take”—what world-nature is this? Generous sapphire-hued Lord, by your generosity and grace draw this servant into the destiny of reaching your ankleted feet.

வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும் ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும் ஈங்கு இதன்மேல் வெம் நரகம் இவை என்ன உலகு இயற்கை வாங்கு எனை நீ மணிவண்ணா அடியேனை மறுக்கேலே (5)

In this flower-world encircled by swelling waters, living things that stand or wander are battered by birth, death, disease, and age—after this, blazing hell. What world-nature is this? Sapphire-hued Lord, take me; do not refuse your servant.

மறுக்கி வல் வலைப்படுத்தி குமைத்திட்டு கொன்று உண்பர் அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை வெறித் துளவ முடியானே வினையேனை உனக்கு அடிமை அறக்கொண்டாய் இனி என் ஆர் அமுதே கூயருளாயே (6)

People oppose, trap in strong nets, beat, kill, and eat; they do not discern the reality of dharma—what world-nature is this? Lord crowned with fragrant tulasī, you wholly took this karmic one as your servant. Now, my inexhaustible nectar, graciously call me.

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால் நோயே மூப்பு இறப்பு பிறப்பு பிணியே என்று இவை ஒழிய கூயேகொள் அடியேனை கொடு உலகம் காட்டேலே (7)

Mother, because you stand as all things in this world, fixed and moving, while no other reality exists apart from you—call and receive this servant. End disease, age, death, birth, and affliction; do not show me the cruel world.

காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால் ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையினில் கழித்து என்னை உன் கொழும் சோதி உயரத்துக் கூட்டு அரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே? (8)

You manifest, hide, and release earth, water, fire, sky, and wind; gathering them, you establish the solitary cosmic egg where the immortals live. When will you remove me from its fortress and join me to your hard-to-attain sacred feet in the height of your abundant Radiance?

கூட்டுதி நின் குரை கழல்கள் இமையோரும் தொழாவகைசெய்து ஆட்டுதி நீ அரவு அணையாய் அடியேனும் அஃது அறிவன் வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழலக் கூட்டு அரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே (9)

You join some to your ringing feet, while arranging that even immortals cannot worship; Lord upon the serpent couch, this servant knows it. You removed every desire and joined me to the rare sacred feet, so that I might wander bearing only them—I have seen it.

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம் ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப கண்ட சதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே (10)

The five instruments wander seeing, hearing, touching, smelling, and tasting; their perceived delight is indiscernibly small and without measure. Seeing the true wisdom in which you and bright-bangled Śrī stand enduringly, I ended all that and reached your sacred feet.

திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை திருவடி சேர்வது கருதி செழுங் குருகூர்ச் சடகோபன் திருவடிமேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப் பத்தும் திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே (11)

Seeking union with the sacred feet of Nārāyaṇa, Keśava, the Supreme Light, Śaṭhakopa of flourishing Kurukūr spoke this decad within a Tamil thousand upon those feet. It leads directly to the sacred feet—join them and become one.