राम
Tiruvāymoḻi
PDF

Book 4 · Decad 10

எம்பெருமான் எல்லாத் தேவதைகளுக்கும் மேற்பட்டவன் (திருக்குருகூர்)

Tiruvāymoḻi 4.10 · pāsurams 32223232

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள் நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே? (1)

When no god, world, life, or any other thing existed, he created four-faced Brahmā, the gods, their worlds, and living beings. While the primordial Lord stands in sacred Kurukūr amid mountain-like jeweled mansions, why seek another deity?

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடு இல் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில் மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனைப் பாடி ஆடி பரவிச் செல்மின்கள் பல் உலகீர் பரந்தே (2)

He first created both you and the deity you search out and worship. The primordial Lord of undecaying glorious fame lovingly inhabits beautiful sacred Kurukūr, encircled by mansions and terraces. People of the many spreading worlds, go singing, dancing, and praising that place.

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கி கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளியகில்லீர் சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள் பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே (3)

He created the widespread gods and many worlds, swallowed them together, hid and released them, strode and raised the earth—seeing all this, you still do not understand. People of the worlds, apart from the Supreme in sacred Kurukūr, before whom immortals bow their heads, no other god exists. Say it.

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே கபால நல் மோக்கத்துக் கண்டுகொண்மின் தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனுள் ஈசன்பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது இலிங்கியர்க்கே? (4)

He is Lord of praised Śiva, Brahmā, and the rest—see it in the noble liberation from the skull. While the Lord dwells in beautiful sacred Kurukūr encircled by vast radiant walls, what can adherents of the liṅga gain by proclaiming fault against him?

இலிங்கத்து இட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும் தெய்வமும் ஆகி நின்றான் மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர் அதனுள் பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே (5)

You of the liṅga-centered Purāṇas, Jains, Buddhists, and all who forcefully dispute: he stands as you and your several deities. See the Lord shining in sacred Kurukūr where abundant red paddy waves like fans. There is no falsehood in this—praise him.

போற்றி மற்று ஓர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள் ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடுமினே (6)

He praises and cherishes another deity outwardly, setting you aside for the moment and keeping you convinced, since if every one of you attained liberation there would be no world. See the mighty Lord’s māyā in sacred Kurukūr, where red rice and lotuses rise from mud; understand again and again, and run to him.

ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து மற்று ஓர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து பல்படிகால் வழி ஏறிக் கண்டீர் கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர் அதனுள் ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு அடிமைபுகுவதுவே (7)

Running again and again through many births, singing, dancing, and bowing to another deity, you have climbed many kinds of paths. See: enter service to the primordial Form with the dancing bird-banner in sacred Kurukūr, where gathered immortals stand praising.

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள் மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே (8)

Mārkaṇḍeya entered service and saw him; even laughing Śiva’s power to save him that day was Nārāyaṇa’s grace. While the surpassing primordial Lord stands in sacred Kurukūr, fenced by broad screw-pines whose flowers resemble herons, why proclaim another deity?

விளம்பும் ஆறு சமயமும் அவைஆகியும் மற்றும் தன்பால் அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும் வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே (9)

He becomes the six proclaimed religions and what lies beyond them, yet the primordial Lord who dwells in beautiful sacred Kurukūr, encircled by cool, prosperous fields, cannot be measured by them. Place him in inward knowledge, if you would have him receive and carry you to salvation.

உறுவது ஆவது எத் தேவும் எவ் உலகங்களும் மற்றும் தன்பால் மறு இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்றவண்ணம் நிற்கவே செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக்குருகூர் அதனுள் குறிய மாண் உரு ஆகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே (10)

Every god, every world, all that becomes, and everything else remain identified with and contained in his faultless Form, exactly as each stands. Serve the long-limbed pot-dancer who became the marked little Dwarf and dwells in sacred Kurukūr where red rice and sugarcane rise in the fields.

ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர்நகரான் நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன் வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப் பத்தும் வல்லார் மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே (11)

Māraṉ Śaṭhakopa of generous Kurukūr, chest fragrant with a fresh makiḻ-flower garland, entered service and joined the Lord of the discus. Those who master this decad from the thousand songs he spoke in longing hold the great city of Vaikuṇṭha in their hands, without return.