राम
Tiruvāymoḻi
PDF

Book 4 · Decad 7

திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்

Tiruvāymoḻi 4.7 · pāsurams 31893199

சீலம் இல்லாச் சிறியனேலும் செய்வினையோ பெரிதால் ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா என்று என்று காலந்தோறும் யான் இருந்து கைதலைபூசல் இட்டால் கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே (1)

Though I am small and without virtue, perhaps my accumulated deeds are great. If at every time I sit, raise clasped hands above my head, and cry “You swallowed the world! Form of knowledge! Nārāyaṇa!” will you not come to let me see your beautiful body, nor call and receive me?

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என் வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்று என்று நள் இராவும் நன் பகலும் நான் இருந்து ஓலம் இட்டால் கள்ள மாயா உன்னை என் கண் காண வந்து ஈயாயே (2)

“My generous Lord who gives a flawless flood of bliss too vast to contain! Vāmana who possessed the earth!” If I sit crying thus through midnight and bright day, deceitful wonder-worker, will you not come and give yourself for my eyes to see?

ஈவு இலாத தீவினைகள் எத்தனை செய்தனன்கொல்? தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்று என்று கூவிக் கூவி நெஞ்சு உருகி கண்பனி சோர நின்றால் பாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே (3)

How many inexhaustible evil deeds have I committed? “Father who leapt and possessed the earth! Dāmodara!” Calling and calling, heart melting and tears falling, I stand. Come so this sinner may see you—will you not speak even the one word, “Sinner, you”?

காண வந்து என் கண்முகப்பே தாமரைக்கண் பிறழ ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்று என்று நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என் பேணி வானோர் காணமாட்டாப் பீடு உடை அப்பனையே? (4)

“Come into the sight of my eyes, lotus eyes moving; my Father of a body like fixed red gold, stand and show grace!” What use is my shameless little self crying here to the glorious Father whom even adoring heaven cannot see?

அப்பனே அடல் ஆழியானே ஆழ் கடலைக் கடைந்த துப்பனே உன் தோள்கள் நான்கும் கண்டிடக்கூடுங்கொல்? என்று எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு ஆவி துவர்ந்து துவர்ந்து இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே (5)

“Father, bearer of the conquering discus, mighty churner of the deep ocean—will I ever gain sight of your four shoulders?” At every moment my eyes fill with water and my soul dries and dries; poor one, I watch and call, “Come this very instant!”

நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யான் எனது ஆவியுள்ளே நாக்கு நீள்வன் ஞானம் இல்லை நாள்தோறும் என்னுடைய ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே (6)

Looking and looking to see you, I stretch my tongue from within my soul, though without knowledge. Each day you stand without absence everywhere—inside my body and soul and also outside them—while I know and know you.

அறிந்து அறிந்து தேறித் தேறி யான் எனது ஆவியுள்ளே நிறைந்த ஞான மூர்த்தியாயை நின்மலமாக வைத்து பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் நறுந் துழாயின் கண்ணி அம்மா நான் உன்னைக் கண்டுகொண்டே (7)

Knowing and knowing, growing clear and still clearer, I placed you within my soul as the stainless, all-filling Form of knowledge. The ignorance that made me stumble through birth and death has ended completely. Lord of the fragrant tulasī wreath, I have found you.

கண்டுகொண்டு என் கைகள் ஆர நின் திருப்பாதங்கள்மேல் எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி உகந்து உகந்து தொண்டரோங்கள் பாடி ஆட சூழ் கடல் ஞாலத்துள்ளே வண் துழாயின் கண்ணி வேந்தே வந்திடகில்லாயே (8)

Having found you, let my hands worship fully upon your sacred feet with flowers from all eight directions, while we servants sing and dance in repeated joy within the sea-ringed world. King of the generous tulasī wreath, will you not come?

இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன் ஐம்புலன் வெல்ல கில்லேன் கடவன் ஆகி காலந்தோறும் பூப் பறித்து ஏத்த கில்லேன் மட வல் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய்த் தடவுகின்றேன் எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே? (9)

I cannot give even one meal, cannot drive away one hunger, cannot conquer the five senses; bound by duty, I cannot pluck flowers in season and praise. My foolish hard heart sharpens its love; burdened by karma, exhausted, I search—where shall I find the Lord of the discus?

சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் மிக்க ஞான மூர்த்தி ஆய வேத விளக்கினை என் தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே (10)

Crying “Lord of the discus!”, bowing as tears overflow, I stand searching every side and languish; sinner, I do not see him. With the eye of knowledge fitted to me, I shall see and embrace the Vedic lamp, the abundant Form of wisdom.

தழுவிநின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தன்னை குழுவு மாடத் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல் வழுவு இலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப் பத்தும் தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே (11)

Through love that stood embracing lotus-eyed Kṛṣṇa, Māraṉ Śaṭhakopa of mansion-filled southern Kurukūr spoke this decad within a thousand flawless, luminous Tamil songs. Those able to embrace them in song and dance will ascend Vaikuṇṭha.