राम
Tiruvāymoḻi
PDF

Book 4 · Decad 6

வெறி விலக்கு

Tiruvāymoḻi 4.6 · pāsurams 31783188

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்! ஓர்ப்பால் இவ் ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம் போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த் தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே? (1)

Mothers, where now shall we seek someone to cure her? We have discerned the true noble sickness that has seized this luminous-browed girl: her thought reaches toward the tulasī of the wondrous warrior-charioteer who made battle and won victory for the Five.

திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெருந் தெய்வம் இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளந் தெய்வம் அன்று இது திசைப்பு இன்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர் இசைக்கிற்றிராகில் நன்றே இல் பெறும் இது காண்மினே (2)

Her illness confounds you, but this belongs to the great God, not some young deity who enters a water-dance without harmony. If you let her clearly hear “conch” and “discus,” it will be good—watch, this very house will regain her.

இது காண்மின் அன்னைமீர் இக் கட்டுவிச்சி சொல் கொண்டு நீர் எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன் மின் மது வார் துழாய் முடி மாயப் பிரான் கழல் வாழ்த்தினால் அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்து ஆகுமே (3)

Mothers, see this: do not heed the fortune-telling priestess and perform whatever rites she names, scattering liquor and flesh. Praise the ankleted feet of the wondrous Lord crowned with honey-rich tulasī; that alone is the rare medicine for the disease she bears.

மருந்து ஆகும் என்று அங்கு ஓர் மாய வலவை சொல் கொண்டு நீர் கருஞ் சோறும் மற்றைச் செஞ் சோறும் களன் இழைத்து என் பயன்? ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில் இவளைப் பெறுதிரே (4)

What use in believing some deceitful old woman who calls it medicine, marking a ritual ground and laying out black rice and red? If you can speak the Name of the Great God who swallowed and released all seven worlds together, you will regain this girl.

இவளைப் பெறும் பரிசு இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ குவளைத் தடங் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள் கவளக் கடாக் களிறு அட்ட பிரான் திருநாமத்தால் தவளப் பொடிக் கொண்டு நீர் இட்டிடுமின் தணியுமே (5)

Alas, spirit-possession dancing is not the way to recover her. Her broad water-lily eyes and kōvai-red mouth have lost their color. Speak the sacred Name of the Lord who struck down the morsel-eating, rut-maddened elephant and apply the pale sacred powder; she will grow calm.

தணியும் பொழுது இல்லை நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர் பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால் மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு அணிய முயலின் மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே (6)

Mothers, there is no moment of relief while you dance for the spirit; the sickness does not leave but only increases. Take dust from the feet of the sapphire-hued wondrous Lord’s servants and try adorning her with it—see, there is no other remedy for this possession.

அணங்குக்கு அரு மருந்து என்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய் துணங்கை எறிந்து நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்? வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே (7)

Mothers, calling it rare medicine for the spirit, you offer a goat and liquor, beat your arms in the tuṇaṅkai dance until your shoulders loosen. What use watching a donkey move its lips while hunger remains? Bow instead to the wondrous Lord’s servants, learned in the Veda.

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய் ஏதம் பறைந்து அல்ல செய்து கள் ஊடு கலாய்த் தூய் கீதம் முழவு இட்டு நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே (8)

Bring those learned in the Veda and bow to the sacred feet of heaven’s Lord, thereby curing this illness. To leave that, proclaim faults, perform alien rites, scatter liquor, beat drums and sing while dancing for a spirit—this is degradation.

கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ் நாழ்மை பல சொல்லி நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன் ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே (9)

I cannot watch the false rite in which you utter many base words and dance beneath a low man’s drum. Intent praise of Kṛṣṇa’s ankleted feet is protection through seven births and the medicine for this sickness—contemplate and do it.

உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள் அவனை அல்லால் நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் மன்னப்படும் மறைவாணனை வண் துவராபதி மன்னனை ஏத்துமின் ஏத்துதலும் தொழுது ஆடுமே (10)

Mothers, she will not contemplate or worship another god besides him, though you speak your own desires and dance until your shoulders loosen. Praise the enduring Lord proclaimed by revelation, king of generous Dvārakā; praising, bow and dance.

தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும் தொழுது ஆடிப் பாட வல்லார் துக்க சீலம் இலர்களே (11)

Śaṭhakopa of generous Kurukūr and faultless ancient fame worshipped, danced, served the pure sapphire-hued Lord, and was cured. Those able to worship, dance, and sing these ten possession-songs within his flawless thousand have no disposition toward sorrow.