राम
Tiruvāymoḻi
PDF

Book 4 · Decad 4

பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்

Tiruvāymoḻi 4.4 · pāsurams 31563166

மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும் கண்ணை உள்நீர் மல்க நின்று கடல்வண்ணன் என்னும் அன்னே என் பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன் பெய் வளையீரே? (1)

She sits probing the earth and says, “This is the land Vāmana measured”; worships the sky, points, and says, “Vaikuṇṭha where he dwells”; stands with eyes brimming and says, “The ocean-hued Lord!” Bangle-wearing women, what can I do for the One who has plunged my daughter into vast delirium?

பெய்வளைக் கைகளைக் கூப்பி பிரான் கிடக்கும் கடல் என்னும் செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும் நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் அன்னே என் தெய்வ உருவில் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே (2)

Joining her bangle-covered hands, she says, “The ocean where my Lord reclines”; pointing to the red sun, she says, “This is Śrīdhara’s form”; standing wasted, tears overflowing, she cries “Nārāyaṇa!” Mother, I do not understand what my divine-formed little doe is doing.

அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் எறியும் தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும் வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடையாட்டியேன் பெற்ற செறி வளை முன் கைச் சிறுமான் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே? (3)

She embraces recognizable red fire, saying “Acyuta,” her body burning; embraces the rushing cool wind, saying “My Govinda.” The fragrant tulasī blossoms scent my densely bangled little doe, born to me of heavy karma—what single thing can my eyes understand in her conduct?

ஒன்றிய திங்களைக் காட்டி ஒளி மணி வண்ணனே என்னும் நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வா என்று கூவும் நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும் என்று இன மையல்கள் செய்தான் என்னுடைக் கோமளத்தையே? (4)

Pointing at the gathered moon she says, “Sapphire-hued Radiance”; gazing upon a standing mountain she cries, “Great Lord, come!” Seeing good rain fall, she dances, saying, “Nārāyaṇa has come!” Why has he bewitched my tender girl in all these ways?

கோமள வான் கன்றைப் புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும் போம் இள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈது என்னும் ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே (5)

Embracing a tender calf she says, “One Govinda grazed”; following a young snake as it glides away, she says, “This is the couch where he lies.” I, burdened by difficult karma, understand nothing within measure: such is the play Māyōn makes after maddening my lovely vine.

கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தன் ஆம் எனா ஓடும் வாய்த்த குழல் ஓசை கேட்கில் மாயவன் என்று மையாக்கும் ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும் பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண்கொடி ஏறிய பித்தே (6)

When performers lift pots and dance, she runs, crying, “It is Govinda!” Hearing the flute’s accomplished sound, she swoons, saying, “The wondrous Lord!” Seeing cowherd women’s butter, she says, “This is the butter he ate.” What madness for the taster of the demoness’s breast has mounted my vine-like daughter!

ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் நீறு செவ்வே இடக் காணில் நெடுமால் அடியார் என்று ஓடும் நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈது என்னும் தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே (7)

Madness rising, she says, “Every world is Kṛṣṇa’s creation.” Seeing the white mark rightly placed, she runs, crying, “Servants of the great Lord!” Seeing fragrant flowering tulasī, she says, “This is Nārāyaṇa’s wreath.” Whether lucid or lost, this sacred girl belongs to Māyōn’s glory alone.

திரு உடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் உரு உடை வண்ணங்கள் காணில் உலகு அளந்தான் என்று துள்ளும் கரு உடைத் தேவு இல்கள் எல்லாம் கடல் வண்ணன் கோயிலே என்னும் வெருவிலும் வீழ்விலும் ஓவாள் கண்ணன் கழல்கள் விரும்புமே (8)

Seeing kings endowed with fortune, she says, “I have seen Tirumāl”; seeing forms of lovely color, she leaps, crying, “The One who measured the world!” Every temple containing a sacred image, she calls “the ocean-hued Lord’s shrine.” In fear or collapse she never ceases desiring Kṛṣṇa’s ankleted feet.

விரும்பிப் பகவரைக் காணில் வியல் இடம் உண்டானே என்னும் கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும் பெரும் புல ஆ நிரை காணில் பிரான் உளன் என்று பின் செல்லும் அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே (9)

Seeing devotees whom she loves, she says, “The One who swallowed the vast earth!” Seeing immense dark clouds, she flies upward, crying “Kṛṣṇa!” Seeing great grazing herds spread through the fields, she follows, saying, “The Lord is among them.” Māyōn makes my rare daughter cry out and faint.

அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி அகலவே நீள் நோக்குக் கொள்ளும் வியர்க்கும் மழைக்கண் துளும்ப வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும் பெயர்த்தும் கண்ணா என்று பேசும் பெருமானே வா என்று கூவும் மயல் பெருங் காதல் என் பேதைக்கு என்செய்கேன் வல்வினையேனே? (10)

Overcome, she grasps those around her and looks, then gazes far into the distance; she sweats, rain-eyes overflow, hot breaths rise, and her body weakens. Again she says “Kṛṣṇa!” and calls, “Great Lord, come!” What can I, heavy with karma, do for my innocent girl’s vast, bewildered love?

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன் சொல் வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும் நல் வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணி தொல்வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே (11)

Śaṭhakopa of generous Kurukūr spoke this decad within a thousand through the action of words upon Kṛṣṇa, who ends hard karma. Those who learn it as good action will reach beneficent Vaikuṇṭha, ancient karma ended, and sit enthroned as all rise in worship.