राम
Tiruvāymoḻi
PDF

Book 4 · Decad 3

எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்

Tiruvāymoḻi 4.3 · pāsurams 31453155

கோவை வாயாள்பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கைக் கோவை வீயச் சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பு ஒசித்தாய் பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும் நின் பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே (1)

For red-kōvai-mouthed Nappinnai you broke the bulls’ necks; bending the bow, you killed Laṅkā’s king behind his walls; you shattered the royal elephant’s tusk. Though I do not worship with flower and water, my heart is sandal paste spread upon your flower-soft body.

பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய வாசகம் செய் மாலையே வான் பட்டு ஆடையும் அஃதே தேசம் ஆன அணிகலனும் என் கைகூப்புச் செய்கையே ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே (2)

My heart is the sandal paste I apply; my words form the wreath I adorn you with and the celestial silk garment; my joined hands become radiant jewels—for the sole Form, my Father and Lord, who swallowed and released the world.

ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி ஆகி ஐந்து பூதம் ஆய் இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற நாராயணனே உன் ஆகம் முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே (3)

One Form, two Forms, three Forms, many Forms; becoming five elements and two lights, remaining formless—Nārāyaṇa, you mount the serpent and sleep in the middle ocean. Enclosing your whole body within my heart has ended the soul’s distress.

மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த மாயப் பேய் உயிர் மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா பூத் தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும் நின் பூத் தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனது உயிரே (4)

Wondrous cowherd who ended the life of the deceptive demoness when she offered her breast intending death, Vāmana, Mādhava—even though I do not worship you with a cool flower-garland, my life itself is the beautiful wreath upon your long crown.

கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா எண் இல் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே கண்ணன் எம் பிரான் எம்மான் கால சக்கரத்தானுக்கே (5)

My life is your wreath; my love is the golden radiance, crown, countless jewels, fitting garment, and even the fame all three worlds approach and speak—for Kṛṣṇa, our Lord and Master, bearer of the wheel of time.

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய் ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே என்று என்று ஓலம் இட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும் கோலம் ஆம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரைகழலே (6)

“Nārāyaṇa, you bear time’s discus and the white conch; you swallowed and released the whole world!” Though I call out and cry and you do not come, your lotus-like feet with resounding anklets remain the beautiful ornament upon my head.

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா குரை கழல் கைகூப்புவார்கள் கூட நின்ற மாயனே விரை கொள் பூவும் நீரும் கொண்டு ஏத்தமாட்டேனேலும் உன் உரை கொள் சோதித் திரு உருவம் என்னது ஆவி மேலதே (7)

Beautiful Vāmana, you extended your resounding feet and possessed the earth; wondrous One, you stand beside all who worship those ankleted feet with joined hands. Though I cannot praise with fragrant flower and water, your scripturally proclaimed radiant form rests upon my soul.

என்னது ஆவி மேலையாய் ஏர் கொள் ஏழ் உலகமும் துன்னி முற்றும் ஆகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய் உன்னது என்னது ஆவியும் என்னது உன்னது ஆவியும் இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லேனே? (8)

You stand above my soul as the Radiant Form of knowledge, filling and becoming all seven beautiful worlds. What is yours is my soul, and what is mine is your soul. How could I say, “This is precisely the way you stand”?

உரைக்க வல்லேன் அல்லேன் உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின் கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன் புரைப்பு இலாத பரம்பரனே பொய் இலாத பரஞ்சுடரே இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன் (9)

I cannot speak it. When could I reach the shore of your limitless flood of fame? I am overcome by love’s delirium. Stainless Supreme beyond the Supreme, unfailing transcendent Light, good and noble people praise you aloud, and I too have praised.

யானும் ஏத்தி ஏழ் உலகும் முற்றும் ஏத்தி பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்? தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகித் தித்திப்ப யானும் எம் பிரானையே ஏத்தினேன் யான் உய்வானே (10)

I praise, all seven worlds entirely praise, and even he praises himself—yet where can praise upon praise ever reach him? Sweetening as honey, milk, sugarcane, and nectar, our Lord alone I praise so that I may live.

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி கண்ணன் ஒண் கழல்கள் மேல் செய்ய தாமரைப் பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன் பொய் இல் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே (11)

Knowing there is no other means of salvation, Śaṭhakopa of southern Kurukūr amid red-lotus fields composed these ten within his truthful thousand upon Kṛṣṇa’s luminous feet. Those who master them will sit established in the world and rule heaven while still upon earth.