राम
Tiruvāymoḻi
PDF

Book 4 · Decad 2

காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்

Tiruvāymoḻi 4.2 · pāsurams 31343144

பாலன் ஆய் ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி ஆல் இலை அன்னவசம் செய்யும் அண்ணலார் தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் என்றே மாலுமால் வல்வினையேன் மட வல்லியே (1)

The Lord became an infant, swallowed seven worlds, and rested carefree upon a banyan leaf. “The beautiful cool tulasī adorning his paired feet!”—so my innocent vine-like daughter, and I of heavy karma, are maddened.

வல்லி சேர் நுண் இடை ஆய்ச்சியர் தம்மொடும் கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர் நல் அடிமேல் அணி நாறு துழாய் என்றே சொல்லுமால் சூழ் வினையாட்டியேன் பாவையே (2)

The cowherd Lord mischievously joined the kuravai with girls whose fine waists resemble clinging vines. “The lovely fragrant tulasī adorning his good feet!”—so speaks my doll-like child, while karmas encircle me.

பா இயல் வேத நல் மாலை பல கொண்டு தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற சேவடிமேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால் கோள் வினையாட்டியேன் கோதையே (3)

Gods and great sages stand bowing with many noble Vedic garlands woven in song. “The red-gold tulasī adorning those red feet!”—so my garlanded girl cries aloud, and I am caught by hostile karma.

கோது இல வண் புகழ் கொண்டு சமயிகள் பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் பரன் பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதுமால் ஊழ்வினையேன் தடந் தோளியே (4)

The transcendent Lord’s faultless generous fame makes adherents of many religions babble of their distinctions. “The green-gold tulasī adorning his feet!”—so chants my broad-shouldered daughter, while ancient karma weighs on me.

தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇக் கோளியார் கோவலனார் குடக் கூத்தனார் தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் என்றே நாளும் நாள் நைகின்றதால் என் தன் மாதரே (5)

For Nappinnai of embracing arms, the masterful cowherd and pot-dancer subdued seven bulls. “The beautiful cool tulasī adorning his paired feet!”—so my daughter languishes more with every passing day.

மாதர் மா மண்மடந்தைபொருட்டு ஏனம் ஆய் ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர் பாதங்கள்மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதும் மால் எய்தினள் என் தன் மடந்தையே (6)

For the great maiden Earth, the Lord became a Boar in primordial time and cleft the broad ground. “The fresh gold-green tulasī adorning his feet!”—so my young daughter chants, having fallen into love’s madness.

மடந்தையை வண் கமலத் திருமாதினை தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல் வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால் வாள் நுதலீர்! என் மடக்கொம்பே (7)

He places the generous lotus Lady upon his chest, broad and adorned with garlands. Bright-browed girls, see my innocent, vine-like child: she folds inward for nothing but the fresh, cool, flower-strung tulasī upon his feet.

கொம்பு போல் சீதைபொருட்டு இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் தாள் இணைமேல் அணி வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் நம்புமால் நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்? (8)

For vine-like Sītā he sent flaming arrows into the city of Laṅkā. My daughter trusts only in the cool tulasī flowers upon his paired feet, their fragrance unfolding. Noble girls, what can I do about this?

நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர் எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை? சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் இங்ஙனே சொல்லும் இராப் பகல் என்செய்கேன்? (9)

Ladies, you too have borne and cherished a daughter—how can I describe the poor child I bore? “Conch,” she says, “discus,” she says, “tulasī,” she says. Night and day she speaks only thus. What shall I do?

என் செய்கேன்? என்னுடைப் பேதை என் கோமளம் என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர் மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே (10)

What shall I do? My innocent girl, my tender beauty, neither obeys my words nor remains under my control. Ladies, she wastes away, saying, “The tulasī from ornament-bright Kṛṣṇa’s feet shall become gold adornment for my soft breasts.”

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள்மேல் மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர் மலி புகழ் வானவர்க்கு ஆவர் நல் கோவையே (11)

Śaṭhakopa of generous, celebrated Kurukūr sang this resonant decad within his famed thousand upon our Kṛṣṇa’s feet, which cure wasting sickness. Those who master it become a noble garland among heaven’s abundantly praised ones.