राम
Tiruvāymoḻi
PDF

Book 4 · Decad 1

செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்

Tiruvāymoḻi 4.1 · pāsurams 31233133

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர் கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர் பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் திருநாரணன் தாள் காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ (1)

Those who once ruled the racing world as sole sovereigns may beg in this very life, legs seized by black dogs and pots broken, while the great country watches. Contemplate sacred Nārāyaṇa’s feet while there is time, and live.

உய்ம்மின் திறைகொணர்ந்து என்று உலகு ஆண்டவர் இம்மையே தம் இன்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு வெம் மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள் செம்மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மினோ (2)

Kings who ruled the world commanding, “Bring tribute and survive,” may relinquish their sweetly pleasing women to others, flee into a blazing lightning-bright forest, and suffer blows. Hurry and reach the feet of red-lightning-crowned Tirumāl.

அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர் பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக் கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ (3)

Kings once crowned at others’ bowed feet, worshipped by rulers while thunderous drums sounded in their courtyards, will pass into dust and particles. Therefore, quickly remember the ankleted feet of Kṛṣṇa, crowned with fragrant tulasī.

நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண்மணலில் பலர் எனைத்தோர் உகங்களும் இவ் உலகு ஆண்டு கழிந்தவர் மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம் பனைத் தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ (4)

Think of it: more rulers than fine grains on the heaped seashore have governed this world through countless ages and passed away; we have seen none escape vanishing far from home. Bow to the feet of him who struck down the rutting, palm-legged elephant.

பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார் துணி முன்பு நால பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர் மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ (5)

Those who tasted the nectar of union with soft-haired women upon cool green-flowered beds, pleading “grant your sacred grace,” may later wander stripped while many poor women mock them. Live by speaking the name of our jewel-radiant Māyā-Lord.

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மா மழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து ஆழ்ந்தார் என்று அல்லால் அன்று முதல் இன்று அறுதியா வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை நிற்குறில் ஆழ்ந்து ஆர் கடற்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ (6)

The lives of those who lived vanish again and again like bubbles upon heavy rain. From that first day until this final one, no one who lived has continued living. If you would endure, become servants of the Lord reclining upon the deep, full ocean.

ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின் தூ மென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவார் ஈமின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர் ஆதலின் கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே (7)

After feasting to satisfaction on rice with all six sweet flavors, accepting more when soft-spoken women lovingly offer it, people may later stumble and beg those same women, “Give us one mouthful.” Therefore proclaim the virtues of the primordial beautiful Radiance crowned with tulasī.

குணம் கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து இணங்கி உலகு உடன் ஆக்கிலும் ஆங்கு அவனை இல்லார் மணம் கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள் மீள்வு இல்லை பணம் கொள் அரவு அணையான் திருநாமம் படிமினோ (8)

Kings of complete character and abundant fame may assume the duty of generosity and rule the whole harmonious world; without him, however, even after enjoying fragrant pleasures they must return. Learn the sacred Name of the Lord upon the hooded serpent couch, and there will be no return.

படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று செடி மன்னு காயம் செற்றார்களும் ஆங்கு அவனை இல்லார் குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வு இல்லை கொடி மன்னு புள் உடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ (9)

Those who sever attachment to the world’s many fixed possessions, conquer the five senses, and destroy the rank body may still return after attaining delightful, enduring heaven if they lack him there. Draw near the feet of the Master whose banner bears the mighty bird, and there is no return.

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் அப் பயன் இல்லையேல் சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடு இல்லை மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடு அஃதே (10)

Even the knower who draws near with profound insight, relinquishes everything, and calls bodily death mere constriction gains nothing if the smallest bond remains in thought; there is no liberation. Hold the unconfused Lord and never release him—that itself is liberation.

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல் கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய் கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும் அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற்பாலரே (11)

Declaring, “That alone is the way of entering salvation,” Śaṭhakopa of flower-groved Kurukūr rendered service at Kṛṣṇa’s feet through a beautiful thousand-song garland. Those who learn these ten without diminution will lose deep sorrow and become capable of deliverance.