राम
Tiruvāymoḻi
PDF

Book 3 · Decad 8

கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்

Tiruvāymoḻi 3.8 · pāsurams 30903100

முடியானே மூவுலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானே ஆழ் கடலைக் கடைந்தாய் புள் ஊர் கொடியானே கொண்டல் வண்ணா அண்டத்து உம்பரில் நெடியானே என்று கிடக்கும் என் நெஞ்சமே (1)

“My crowned Lord, whose glorious feet all three worlds worship; you churned the deep ocean, ride the bird and bear its banner; cloud-hued, tallest among those beyond the cosmic sphere”—so my heart lies calling.

நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என் தஞ்சனே தண் இலங்கைக்கு இறையைச் செற்ற நஞ்சனே ஞாலம் கொள்வான் குறள் ஆகிய வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே (2)

“My refuge who made my heart your long-enduring city; poison to the lord of cool Laṅkā; deceiver who became a Dwarf to possess the world”—so my speech cries at every moment.

வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நாயகனே நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து வேய் அகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆன் ஆயர் தாயவனே என்று தடவும் என் கைகளே (3)

“Lord of the celestials who graciously lets speech praise you; you freed the young crescent from its affliction; cowherd child who ate butter touched and taken from the bamboo-roofed homes”—so my hands reach out to feel him.

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றி பை கொள் பாம்பு ஏறி உறை பரனே உன்னை மெய்கொள்ளக் காண விரும்பும் என் கண்களே (4)

Again and again my hands would worship you completely, every day without even an instant’s interval. Supreme One who ascends and rests upon the hooded serpent, my eyes desire to see you embodied and true.

கண்களால் காண வருங்கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே (5)

“Will my eyes ever see him?” Longing, my ears lie attentive and firm, imagining the musical thunder of the bird’s wings as it carries joyfully aloft Vāmana, who came to possess the earth.

செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்று புவியின்மேல் பொன் நெடும் சக்கரத்து உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே (6)

Poems called the fruit of your fame arrive so that my ears may drink their fill, ancient modes distilling honey. My soul loves without interruption you alone upon the earth, bearer of the tall golden discus.

ஆவியே ஆர் அமுதே என்னை ஆளுடைத் தூவி அம் புள் உடையாய் சுடர் நேமியாய் பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே (7)

My soul, inexhaustible nectar, ruler of me, possessor of the beautiful pure-feathered bird, bearer of the radiant discus—my sinful heart has lamented and called many times, yet I have not gained sight of your form.

கோலமே தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே சென்று செல்லாதன முன் நிலாம் காலமே உன்னை எந் நாள் கண்டுகொள்வனே? (8)

Beautiful form: a kohl-blue body with lotus eyes. Noble nature standing there and drawing away my soul. Time that was, is, and has not yet gone—on what day shall I see you?

கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே? (9)

Thief who told Mahābali, “I shall take it—give me three steps”; deceiver of Kaṃsa; rider of the mighty bird who cut a thousand arms until Bāṇa’s inward pride was gone—when shall I unite with you?

பொருந்திய மா மருதின் இடை போய எம் பெருந்தகாய் உன் கழல் காணிய பேதுற்று வருந்தி நான் வாசகமாலை கொண்டு உன்னையே இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே? (10)

Our great Lord who passed between the joined, mighty marutam trees, maddened by longing to see your ankleted feet, how long must I sit and sit, lamenting you with a garland of words?

புலம்பு சீர்ப் பூமி அளந்த பெருமானை நலம் கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன்சொல் வலம் கொண்ட ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இலங்கு வான் யாவரும் ஏறுவர் சொன்னாலே (11)

Śaṭhakopa of noble, glorious Kurukūr spoke this decad within his powerful thousand on the Lord who measured the lamenting earth. If recited, it will raise every reciter to the radiant heaven.