राम
Tiruvāymoḻi
PDF

Book 2 · Decad 9

புருஷார்த்த நிர்ணயம்

Tiruvāymoḻi 2.9 · pāsurams 29913001

எம் மா வீட்டுத் திறமும் செப்பம் நின் செம் மா பாட பற்புத் தலை சேர்த்து ஒல்லை கைம்மா துன்பம் கடிந்த பிரானே அம்மா அடியேன் வேண்டுவது ஈதே (1)

Do not tell me of the nature of our vast liberation. Lord who ended the great elephant’s anguish, quickly place your noble red-lotus feet upon my head. Mother, this alone is what your servant asks.

ஈதே யான் உன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என் மை தோய் சோதி மணிவண்ண எந்தாய் எய்தா நின் கழல் யான் எய்த ஞானக் கை தா காலக் கழிவு செய்யேலே (2)

This alone is how I shall possess you forever, my kohl-dark radiance, jewel-hued Father: give me the hand of knowledge by which I may reach your feet that cannot otherwise be reached. Do not let time pass.

செய்யேல் தீவினை என்று அருள் செய்யும் என் கை ஆர் சக்கரக் கண்ண பிரானே ஐ ஆர் கண்டம் அடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே (3)

My discus-handed Lord Kṛṣṇa who graciously says, “Commit no evil”—even when the five channels crowd and close my throat, grant me to praise your feet without failing to attain them.

எனக்கே ஆட்செய் எக் காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே (4)

Come into my mind, saying, “Serve me alone at every time,” and remain without the smallest interval, taking me wholly for yourself. This is the distinction by which I take Kṛṣṇa for myself alone.

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம் இறப்பில் எய்துக எய்தற்க யானும் பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே (5)

Whether at death I attain or fail to attain distinguished liberation, heaven, or hell, I shall forever rejoice without one moment of forgetting the birthless Lord of countless births.

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம் மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே (6)

Lord who blossoms as the joyful radiance of gods, worlds, and what is beyond worlds—come, so that with delighted thought, word, and deed I may worship you forever in ever-growing joy.

வாராய் உன் திருப் பாத மலர்க்கீழ்ப் பேராதே யான் வந்து அடையும்படி தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும் ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே (7)

Come! Grant that I may reach beneath your sacred lotus feet and never move away. If you establish yourself within me forever, inexhaustible One, at what time could I ever be unsatisfied?

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று எக் காலத்திலும் யாதொன்றும் வேண்டேன் மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே உன்னை யானே (8)

If you remain within me as my Father at every time, I shall ask for nothing at any time. You are my sugar-sweet fruit, swallowed in contemplation by the great and stainless knowers of the Veda.

யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் யானே நீ என் உடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே (9)

Not knowing myself, I sat declaring, “I am myself, and this is mine.” But I myself am you, and all I possess is you—bull among the heavenly ones, praised by heaven itself.

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை நீறே செய்த நெடுஞ் சுடர்ச் சோதி தேறேல் என்னை உன் பொன் அடி சேர்த்து ஒல்லை வேறே போக எஞ்ஞான்றும் விடலே (10)

You conquered the seven bulls and became the towering flame-radiance that reduced lovely Laṅkā to ash. Do not depend upon my clarity; quickly join me to your golden feet and never let me depart elsewhere.

விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல் விடல் இல் வண் குருகூர்ச் சடகோபன் கெடல் இல் ஆயிரத்துள் இவை பத்தும் கெடல் இல் வீடு செய்யும் கிளர்வார்க்கே (11)

Śaṭhakopa of generous Kurukūr clung without release to the Master of the unfailing discus. These ten within his imperishable thousand grant undecaying liberation to those who awaken and recite them.