राम
Tiruvāymoḻi
PDF

Book 2 · Decad 5

இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்

Tiruvāymoḻi 2.5 · pāsurams 29452955

அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள செந்தாமரைத்தடம் கண் செங்கனி வாய் செங்கமலம் செந்தாமரை அடிகள் செம்பொன் திரு உடம்பே (1)

My soul has lovingly joined its Lord of the beautiful garland. Garlanded crown, conch, discus, sacred thread, and necklace are his; broad red-lotus eyes, red-fruit mouth, crimson lotus hands and feet, and a sacred body of red gold are his.

திரு உடம்பு வான் சுடர் செந்தாமரை கண் கை கமலம் திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ் ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓ ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே (2)

His divine body is heaven’s radiance; his eyes and hands are lotuses. Śrī’s place is his chest, Ayan’s place his navel, and—O Father—Hara’s place is another portion. Yet he who left no portion unassigned has mingled wholly within me.

என்னுள் கலந்தவன் செங்கனி வாய் செங்கமலம் மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம் மன்னும் முழு ஏழ் உலகும் வயிற்றின் உள தன்னுள் கலவாதது எப் பொருளும் தான் இலையே (3)

He who mingled within me has a red-fruit mouth, a red lotus upon a lightning-bright mountain; eyes, feet, and hands are lotuses. All seven enduring worlds lie within his belly. Nothing exists that is not mingled within him.

எப் பொருளும் தான் ஆய் மரகதக் குன்றம் ஒக்கும் அப்பொழுதைத் தாமரைப்பூக் கண் பாதம் கை கமலம் எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே (4)

Being every thing, he resembles an emerald hill; his eyes, feet, and hands are freshly opened lotuses. Every day, month, year, age, and age beyond age, he is at each new moment my inexhaustible nectar.

ஆரா அமுதமாய் அல் ஆவியுள் கலந்த கார் ஆர் கருமுகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு நேரா வாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம் பேர் ஆரம் நீள் முடி நாண் பின்னும் இழை பலவே (5)

My Lord Kṛṣṇa, dark as a rain-laden cloud, entered this poor soul as nectar that never satisfies. Red coral cannot equal his mouth; his eyes, feet, and hands are lotuses. Great necklace, tall crown, waist-cord, and countless ornaments adorn him.

பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில் பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம் பலபலவே ஞானமும் பாம்பு அணை மேலாற்கேயோ (6)

Many, many are his ornaments, and many his names; many his radiant forms and qualities beyond counting. The delights of seeing, tasting, hearing, touching, and smelling are manifold, as are the wisdoms of the One upon the serpent couch.

பாம்பு அணைமேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும் காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய் ஏறு உடன் ஏழ் செற்றதுவும் தேம் பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும் பூம் பிணைய தண் துழாய்ப் பொன் முடி அம் போர் ஏறே (7)

He rests upon the serpent bed in the Milk Ocean; for bamboo-armed Nappinnai he conquered seven bulls; in the honey-rich grove he pierced seven marā trees. The beautiful bull of battle wears flower-bound cool tulasī upon his golden crown.

பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடம் தோள் தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை சொல்முடிவு காணேன் நான் சொல்லுவது என்? சொல்லீரே (8)

Our Lord is the beautiful battle-bull with golden crown, four broad arms, and a cool tulasī garland whose end no one can find. He saw no boundary to me and mingled within; I find no boundary to words about him. What can I say? You tell me.

சொல்லீர் என் அம்மானை என் ஆவி ஆவிதனை எல்லை இல் சீர் என் கருமாணிக்கச் சுடரை நல்ல அமுதம் பெறற்கு அரிய வீடும் ஆய் அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே (9)

Tell me of my Lord, the life within my life, my dark-jewel radiance of boundless excellence—fine nectar, liberation difficult to attain, fragrance of the water-lily. He is neither male nor female.

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன் பேணுங்கால் பேணும் உரு ஆகும் அல்லனும் ஆம் கோணை பெரிது உடைத்து எம் பெம்மானைக் கூறுதலே (10)

He is not male, not female, and not what is neither. He cannot be seen; he is not existent, nor is he nonexistent. When lovingly sought, he becomes the form desired—and is also other than it. Speaking our great Lord is profoundly crooked work.

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக் கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன் கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே (11)

Desiring only to speak the indescribable Lord who dances with pots, Śaṭhakopa of Kurukūr composed this decad within a thousand linked verses. If any can speak these ten, they will join Vaikuṇṭha.