राम
Tiruvāymoḻi
PDF

Book 2 · Decad 4

தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்

Tiruvāymoḻi 2.4 · pāsurams 29342944

ஆடி ஆடி அகம் கரைந்து இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும் இவ் வாள் நுதலே (1)

She dances and dances until her heart dissolves; she sings and sings while tears overflow; searching everywhere again and again, crying “Narasimha!”, this bright-browed girl withers and withers.

வாள் நுதல் இம் மடவரல் உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக் காண நீர் இரக்கம் இலீரே (2)

This innocent, shining-browed girl wastes away in desire to see you. Mighty Lord who severed Bāṇa’s thousand arms—she longs for your sight, yet you show her no compassion.

இரக்க மனத்தோடு எரி அணை அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் அரக்கன் இலங்கை செற்றீருக்கே? (3)

Her tender heart melts at love’s fire like lac and wax laid upon a flame. You raise no pity—what can I do about this, you who destroyed the rākṣasa’s Laṅkā?

இலங்கை செற்றவனே என்னும் பின்னும் வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் உள்ளம் மலங்க வெவ் உயிர்க்கும் கண்ணீர் மிகக் கலங்கிக் கைதொழும் நின்று இவளே (4)

She says, “O destroyer of Laṅkā!” and then, “O Lord who raises the victorious bird!” Her mind reels, her hot breath rises, her tears grow uncontrollable; still she stands with folded hands and worships.

இவள் இராப்பகல் வாய்வெரீ இத் தன குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு திவளும் தண் அம் துழாய் கொடீர் என தவள வண்ணர் தகவுகளே? (5)

Day and night she cries out in delirium, her luminous water-lily eyes filled with tears: “Give me the cool, beautiful tulasī where bees shimmer!” Is this the compassion of the radiant, pale-hued Lord?

தகவு உடையவனே என்னும் பின்னும் மிக விரும்பும் பிரான் என்னும் எனது அக உயிர்க்கு அமுதே என்னும் உள்ளம் உக உருகிநின்று உள் உளே (6)

“He is the compassionate One,” she says; then, “the Lord I desire beyond measure, the nectar of my inward life.” Her heart softens and melts away within itself.

உள் உள் ஆவி உலர்ந்து உலர்ந்து என வள்ளலே கண்ணனே என்னும் பின்னும் வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என கள்வி தான் பட்ட வஞ்சனையே (7)

Her life dries and dries from the inside. “Generous One! My Kṛṣṇa!” she cries; then, “You who recline on the flood!” This is the deception into which my secretive girl has fallen.

வஞ்சனே என்னும் கைதொழும் தன நெஞ்சம் வேவ நெடிது உயிர்க்கும் விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத் தஞ்சம் என்று இவள் பட்டனவே (8)

“Deceiver!” she says, yet folds her hands in worship; her heart burns and she sighs deeply. You who deceived the mighty Kaṃsa—see what this girl has suffered by taking you as refuge.

பட்ட போது எழு போது அறியாள் விரை மட்டு அலர் தண் துழாய் என்னும் சுடர் வட்ட வாய் நுதி நேமியீர் நுமது இட்டம் என்கொல் இவ் ஏழைக்கே? (9)

She no longer knows the time of lying down or rising; she speaks only of “cool tulasī flowers fragrant with dripping honey.” Lord of the radiant, round, sharp-edged discus, what is your intention for this poor girl?

ஏழை பேதை இராப்பகல் தன கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள் கிளர் வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே (10)

Poor innocent girl—night and day her peerlessly beautiful eyes carry tears. You burned prosperous Laṅkā until its life withered; do not also torment this doe-eyed child.

வாட்டம் இல் புகழ் வாமனனை இசை கூட்டி வண் சடகோபன் சொல் அமை பாட்டு ஓர் ஆயிரத்து இப் பத்தால் அடி சூட்டலாகும் அம் தாமமே (11)

Generous Śaṭhakopa joined melody to the unfading fame of Vāmana and fashioned these ten within his thousand songs. With them one may crown oneself with the beautiful garland of his feet.