राम
Tiruvāymoḻi
PDF

Book 2 · Decad 3

திருவாய்மொழி 2.3

Tiruvāymoḻi 2.3 · pāsurams 29232933

ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னைப் பெற்று வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே (1)

Soul dwelling in flesh, how good you are! Having gained you, you and I have mingled without distinction within Madhusūdana, Lord of those in heaven, like honey, milk, ghee, sugarcane juice, and nectar blended into one sweetness.

ஒத்தார் மிக்காரை இலையாய மா மாய ஒத்தாய் எப் பொருட்கும் உயிர் ஆய் என்னைப் பெற்ற அத் தாய் ஆய் தந்தை ஆய் அறியாதன அறிவித்து அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே (2)

Great wonder, with none equal or greater, you fit yourself to every thing as its life. You became the mother who bore me and the father who taught what I did not know. Master, I your servant cannot comprehend all you have done.

அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் அறியாமைக் குறள் ஆய் நிலம் மாவலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவியுள் கலந்தே (3)

Before I knew anything, you made me love servitude to you, though you placed this servant in vast, unknowable māyā. Becoming the guileless little Dwarf, you guilefully asked Mahābali for three steps of earth; then you mingled within my soul.

எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவிக் கைம்மாறு எனது ஆவி தந்தொழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே? எனது ஆவி ஆவியும் நீ பொழில் ஏழும் உண்ட எந்தாய் எனது ஆவி யார்? யான் ஆர்? தந்த நீ கொண்டாக்கினையே (4)

For the immense kindness of mingling with my soul, I gave that soul itself in return. Can there now be any taking it back? You are the life of my life, Father who swallowed seven worlds. What is my soul, and who am I? You gave it, then made it yours.

இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய் கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனி ஆர் கோட்டில் வைத்தாய் நுன பாதம் சேர்ந்தேனே (5)

Father whom no accumulation of knowledge can raise into thought, ripe bliss of liberation, nectar not churned from the sea, first support of this solitary life—you became the Boar and held the seven worlds upon your keen tusk. I have reached your feet.

சேர்ந்தார் தீவினைகட்கு அரு நஞ்சை திண் மதியை தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே புகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே (6)

I have reached the primordial One: deadly poison to the evil deeds of those who join him, a strong moon never leaving the minds of the detached, a radiance that does not let their lives sink without refuge, and the hero who severed the demoness’s nose.

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே பல் நலார் பயிலும் பரனே பவித்திரனே கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா நின் அலால் இலேன்காண் என்னை நீ குறிக்கொள்ளே (7)

You are the mature sweetness in the strings of a finely played ancient yāḻ; the Supreme whom the excellent contemplate; the Pure One, sugarcane and nectar, dark cloud, my Kṛṣṇa. See—I have no existence apart from you. Take me as your charge.

குறிக்கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும் கிறிக்கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான் உறிக்கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின் நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே (8)

Through focused understanding and austerity practiced age after age, by a wondrous turn I attained this birth within a few days. My heart took the path behind the Lord who secretly ate butter and milk from the hanging pot, and cut away the grief of birth.

கடி வார் தண் அம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான் படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர் செடி ஆர் நோய்கள் கெட படிந்து குடைந்து ஆடி அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே (9)

Kṛṣṇa, crowned with fragrant cool tulasī, is Lord of the celestials, the transcendent Pure One beyond the patterned heavens. I plunged, bathed, and danced in his glory until rank sicknesses died; taking him to my servant-mouth, I drank and rejoiced.

களிப்பும் கவர்வும் அற்று பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று ஒளிக்கொண்ட சோதியுமாய் உடன்கூடுவது என்று கொலோ துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே? (10)

When shall I be free from craving and aversion, birth, disease, age, and death, and unite with the luminous Radiance—together with the companies of the wondrous Lord’s servants, whom he protects while bearing shining discus and conch beneath the rain-giving sky?

குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை குழாம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த குழாம் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி குழாங்களாய் அடியீர் உடன்கூடிநின்று ஆடுமினே (11)

Śaṭhakopa of southern Kurukūr, rich in gathered communities, clearly sang the One who grew fierce and destroyed the clan of the mighty rākṣasa king. Servants, sing these ten within the assembled thousand; gather in companies and dance together.