राम
Tiruvāymoḻi
PDF

Book 2 · Decad 1

பிரிவாற்றாமைக்கு வருந்தல்

Tiruvāymoḻi 2.1 · pāsurams 29012911

வாயும் திரை உகளும் கானல் மட நாராய் ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால் நோயும் பயலைமையும் மீது ஊர எம்மேபோல் நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே? (1)

Gentle heron of the lagoon where breaking waves leap, even when my mother and the celestial world sleep, you do not. As sickness and pallor spread over you, has Tirumāl captured your heart as he has mine?

கோள் பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலே சேண் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால் ஆள் பட்ட எம்மேபோல் நீயும் அரவு அணையான் தாள் பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே? (2)

Sharp-beaked anril, your mind is seized and you lament through the long reaches of night without resting. Like us, his servants, do you also desire the cool tulasī garland that touches the feet of the serpent-couch Lord?

காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல் நீ முற்றக் கண்துயிலாய் நெஞ்சு உருகி ஏங்குதியால் தீ முற்றத் தென் இலங்கை ஊட்டினான் தாள் நயந்த யாம் உற்றது உற்றாயோ? வாழி கனை கடலே (3)

Roaring sea, day and night you never close your eyes; helpless with love, your heart melts and yearns. Long life to you—have you too suffered what we suffer, desiring the feet of him who fed southern Laṅkā to the flames?

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல் சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய் அடல் கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் நீ உடலம் நோய் உற்றாயோ ஊழிதோறு ஊழியே? (4)

Cool wind, you search through sea, mountain, and sky, and like us you sleep through neither radiant day nor night. Has your body fallen sick through age after age from longing to see the Lord of the conquering discus?

ஊழிதோறு ஊழி உலகுக்கு நீர்கொண்டு தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற வாழிய வானமே நீயும் மதுசூதன் பாழிமையில் பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே? (5)

O sky, age after age you draw up water for the world, then loosen into tears like my companions and me. Long life to you—have you too been overcome by Madhusūdana’s might and withered in attachment to him?

நைவாய எம்மேபோல் நாள் மதியே நீ இந் நாள் மை வான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால் ஐ வாய் அரவு அணைமேல் ஆழிப் பெருமானார் மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே? (6)

Lovely moon, like us you languish today: you do not drive back the ink-dark night, but fade and weep. Did you trust the embodied promise of the discus Lord upon the five-mouthed serpent and lose your own true radiance?

தோற்றோம் மட நெஞ்சம் எம் பெருமான் நாரணற்கு எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே வேற்றோர் வகையில் கொடிதாய் எனை ஊழி மாற்றாண்மை நிற்றியோ? வாழி கனை இருளே (7)

We have lost our foolish hearts to our Lord Nārāyaṇa, telling our helplessness and weeping. Dense darkness, long life to you—but why do you stand between us, cruel in another fashion, an unchanging enemy for an eon?

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய் மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால் உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே? (8)

Great salt lagoon, dark as compact night, even when the bewildered world sleeps by day and night you never do. Have you plunged into pain through vast hope for the grace of the Lord who kicked the rolling cart?

நொந்து ஆராக் காதல் நோய் மெல் ஆவி உள் உலர்த்த நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய் செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் எம் பெருமான் அம் தாமம் தண் துழாய் ஆசையால் வேவாயே? (9)

Unfailing lamp, tender soul dried from within by an insatiable fever of love—how pitiable you are! Do you burn from desire for the beautiful, cool tulasī garland of our broad red-lotus-eyed, red-fruit-lipped Lord?

வேவு ஆரா வேட்கை நோய் மெல் ஆவி உள் உலர்த்த ஓவாது இராப்பகல் உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய் மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே (10)

The fever of unappeased desire dries my tender life within; ceaselessly, night and day, you have cast me down before you. Deathless First One who tore the horse’s mouth, passed between the twin trees, and measured earth—do not let us waste away now.

சோராத எப் பொருட்கும் ஆதியாம் சோதிக்கே ஆராத காதல் குருகூர்ச் சடகோபன் ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும் சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே (11)

Śaṭhakopa of Kurukūr, filled with unappeasable love for the Radiance who is the unfailing source of every thing, spoke a thousand. Know this: those who neither tire of nor abandon these ten are certain of Vaikuṇṭha.