राम
Tiruvāymoḻi
PDF

Book 10 · Decad 7

ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)

Tiruvāymoḻi 10.7 · pāsurams 38493859

செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்ம்மின் திருமாலிருஞ்சோலை வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியாவண்ணம் என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே (1)

Poems of beautiful words, guard your lives and serve! The deceitful thief of sacred Māliruñcōlai, the great mystery, came as magical poetry and mingled within my heart and life, unknown to those standing near. He consumed heart and life, became them himself, and filled all.

தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே ஆய் தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலைக் கோனே ஆகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே (2)

Becoming himself, he filled everything and became every world and life. Becoming the speaker who says “I,” he praised himself through himself and became honey, milk, sugarcane, and nectar to me. The Lord of sacred Māliruñcōlai consumed my life completely and ended by standing as himself.

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு என்னை முற்றும் தானே ஆய் நின்ற மாய அம்மான் சேர் தென் நன் திருமாலிருஞ்சோலைத் திசை கைகூப்பிச் சேர்ந்த யான் இன்னும் போவேனேகொலோ? என்கொல் அம்மான் திரு அருளே? (3)

He consumed my life entire, entered this illusory body, and stood as all of me himself—the mysterious Master. I joined my hands toward the southern, noble sacred Māliruñcōlai where he dwells and reached it. Can I still depart? What indeed is the sacred grace of my Master!

என்கொல் அம்மான் திரு அருள்கள் உலகும் உயிரும் தானே ஆய் நன்கு என் உடலம் கைவிடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை நங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே? (4)

What can explain my Master’s sacred graces? He is himself world and life, and will not leave my body. He strides and moves through the earth so asuras who refuse to approach are crushed, yet never leaves our hill, sacred Māliruñcōlai, standing as the tilaka of the southern quarter.

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த எண்ணாதனகள் எண்ணும் நல் முனிவர் இன்பம் தலைசிறப்ப பண் ஆர் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே (5)

Asuras who refuse him meet ruin; noble immortals gain splendor; good sages who contemplate the inconceivable reach supreme joy. Becoming me and my sweet, musical poetry, he sings himself. My Father, Lord of sacred Māliruñcōlai, cries the refrain “Southern Lord!”

திருமாலிருஞ்சோலையானே ஆகி செழு மூவுலகும் தன் ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலையளிக்கும் திருமால் என்னை ஆளும் மால் சிவனும் பிரமனும் காணாது அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே (6)

Becoming the Lord of sacred Māliruñcōlai, he places all three prosperous worlds within his one great belly and cherishes them age after age. Tirumāl, Māl who rules me, is the Master who gave grace when Śiva and Brahmā, unable to behold him, fell into rare longing and praised his feet.

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும் இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை மருள்கள் கடியும் மணிமலை திருமாலிருஞ்சோலை மலையே (7)

“Grant grace, my Master!” cries the three-eyed Lord; so do enlightened Brahmā, the king of gods, all the gods, and sages who dispel darkness. Their praised sacred hill is Māliruñcōlai—the jeweled mountain that dispels delusion.

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே (8)

Sacred Māliruñcōlai hill, the sacred Milk Ocean, and my own head; Tirumāl’s Vaikuṇṭha, cool sacred Veṅkaṭam, and my body; my life within rare vast illusion, mind, speech, and deed—from none of these does my peerless primal Lord of the age depart for even one great instant.

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம் ஊழிதோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்து உழலும் ஆழிவண்ணன் என் அம்மான் அம் தண் திருமாலிருஞ்சோலை வாழி மனமே! கைவிடேல் உடலும் உயிரும் மங்க ஒட்டே (9)

The peerless one called the first Lord of the age fashions every world within himself age after age, guards, dissolves, and moves among them. Long live beautiful cool sacred Māliruñcōlai of my ocean-hued Father! Heart, never abandon it; do not let body or life fade.

மங்க ஒட்டு உன் மா மாயை திருமாலிருஞ்சோலை மேய நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம் இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே. (10)

Let your vast illusion fade, our king who dwells in sacred Māliruñcōlai. You became me and protected me. The swelling five sense-objects, five organs of perception, organs of action, five elements, this embodied life, fitted prakṛti, mighty ego, and minds—all are you.

மான் ஆங்காரம் மனம் கெட ஐவர் வன்கையர் மங்க தான் ஆங்காரமாய்ப் புக்கு தானே தானே ஆனானைத் தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள் மான் ஆங்காரத்து இவை பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே. (11)

He entered as the very principle of selfhood, destroying great ego and mind and making the five mighty-handed senses fade, until he alone became himself. These ten among the thousand of Caṭakōpa of honey-groved Kurukūr, majestic in expression, belong to the sacred Māliruñcōlai hill.