राम
Tiruvāymoḻi
PDF

Book 10 · Decad 6

தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு)

Tiruvāymoḻi 10.6 · pāsurams 38383848

அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே இருள் தரு மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன் மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே (1)

For me, servant of the servants who receive grace, the discus-bearer stands ready to grant grace; such is the order of our destiny. I desire no further birth in this great world that gives darkness. Ignorant heart, abandon delusion and bow to the feet of the Lord of sacred Vāṭṭāṟu.

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலப் பிறப்பு அறுப்பான் கேட்டாயே மட நெஞ்சே! கேசவன் எம் பெருமானைப் பாட்டு ஆய பல பாடி பழவினைகள் பற்று அறுத்து நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே (2)

Bow to the feet of the Lord of Vāṭṭāṟu, and he will sever birth upon the great earth. Did you hear, innocent heart? Singing many songs made of Keśava, our Lord, we cut away the bonds of ancient deeds, left customary life among the people, and drew near Nārāyaṇa.

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி மண் உலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று விண் உலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே (3)

Speaking his many names, we have drawn near Nārāyaṇa. Today the Lord came to prosperous earthly Vāṭṭāṟu and now hastens to grant the heavenly world, according to the order of destiny. Heart, these deeds can no longer unfold as they intended.

என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான் மன் அஞ்ச பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே (4)

Dwelling here within my heart, the Lord of Vāṭṭāṟu voiced this rich Tamil work. He tore the chest of hard-hearted Hiraṇya and took up arms for the Pāṇḍavas in the Bhārata war until kings trembled. Good heart, our Lord himself will grant us grace.

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணிவகையே நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே! தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை தான் ஏறித் திரிவான தாள் இணை என் தலைமேலே (5)

Through service to the Lord of Vāṭṭāṟu, who gave the path for ascending heaven, I too receive that ascent. Heart, laugh at hell! He rides the magnificent bird; his radiant feet bear tulasī flowers risen with honey. His paired feet are upon my head.

தலைமேல தாள் இணைகள் தாமரைக்கண் என் அம்மான் நிலைபேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான் மலை மாடத்து அரவு அணைமேல் வாட்டாற்றான் மதம் மிக்க கொலை யானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே (6)

The paired feet of my lotus-eyed Father rest upon my head. Our Lord never shifts his station within my heart, but remains always. The Lord of mansioned, mountainous Vāṭṭāṟu reclines upon the serpent-bed and snapped the tusk of the murderous, rut-maddened elephant. We have drawn near his resounding anklets.

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான் திரை குழுவு கடல் புடை சூழ் தென் நாட்டுத் திலதம் அன்ன வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடிமேல் விரை குழுவு நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே (7)

We have approached the resounding anklets; our Govinda has settled within us. The tulasī clustered with fragrance upon the flower-feet of the Lord of Vāṭṭāṟu truly diffuses perfume. His jeweled mansions gather like mountains, and his town resembles the tilaka of the southern land encircled by a sea of massing waves.

மெய்ந்நின்று கமழ் துளவ விரை ஏறு திருமுடியன் கைந்நின்ற சக்கரத்தன் கருதும் இடம் பொருது புனல் மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு எந் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே? (8)

His sacred crown rises fragrant with tulasī whose perfume truly abides; the discus rests in his hand. The Lord of Vāṭṭāṟu has a sacred form like a dark mountain and chose that place of clashing waters. What good did I ever perform, that he should shine within my heart?

திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு புகழ்நின்ற புள் ஊர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான் இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே (9)

The sacred Lady shines upon the radiant sacred chest of Tirumāl; cool Vāṭṭāṟu is the dwelling he joins. Riding the famed bird, he destroyed the warrior-rākṣasa clan. Without disdain, he never departs from my heart at any time.

பிரியாது ஆட்செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அறக்கொண்டான் அரி ஆகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு வரி வாள் வாய் அரவு அணைமேல் வாட்டாற்றான் காட்டினனே (10)

“Serve without parting.” He severed birth, took me completely, and ruled. Once he became the lion and split Hiraṇya’s body. Reclining in Vāṭṭāṟu upon the striped, bright-mouthed serpent-bed, he showed how, when one becomes servant to the Great, one gains the fruit otherwise unattainable.

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த வாட்டாற்று எம் பெருமானை வளங் குருகூர்ச் சடகோபன் பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப் பத்தும் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே (11)

Our Lord of Vāṭṭāṟu revealed his resounding anklets and prevented entry into fierce hell. Upon him Caṭakōpa of prosperous Kurukūr spoke these ten within his garland of a thousand Tamil songs. Their fine words are sweet even to celestial ears, which never tire of hearing them.