राम
Tiruvāymoḻi
PDF

Book 10 · Decad 4

ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்

Tiruvāymoḻi 10.4 · pāsurams 38163826

சார்வே தவநெறிக்குத் தாமோதரன் தாள்கள் கார் மேக வண்ணன் கமல நயனத்தன் நீர் வானம் மண் எரி கால் ஆய் நின்ற நேமியான் பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே (1)

Dāmodara’s feet are the sole support upon the path of austerity. Dark-raincloud-hued and lotus-eyed, the discus-bearer stands as water, sky, earth, fire, and wind. His greatness makes the exalted celestials babble in praise.

பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்கு அருமையனே ஆகத்து அணையாதார்க்கு என்றும் திரு மெய் உறைகின்ற செங்கண் மால் நாளும் இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே (2)

Great one, difficult even for the immortals in heaven to behold and forever inaccessible to those who do not embrace him within—red-eyed Māl, upon whose sacred body Śrī dwells, severs both kinds of deeds each day and rules me here.

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவு உடையம்? மீள்கின்றது இல்லை பிறவித் துயர் கடிந்தோம் வாள் கெண்டை ஒண்கண் மடப் பின்னை தன் கேள்வன் தாள் கண்டுகொண்டு என் தலைமேல் புனைந்தேனே (3)

The discus-bearer rules us; through whom could we suffer any lack? There is no return—we have severed the sorrow of birth. I beheld the feet of the bridegroom of gentle Nappiṉṉai, her bright eyes sharp as darting fish, and adorned my head with them.

தலைமேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின் இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே (4)

I adorned my head with the refuge-feet of him who slept upon the banyan leaf, stood upon the mountain while immortals worshiped, and dwelt within my heart. I settled firmly, resolved never to dislodge him from that station.

நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையன் மெச்சப்படான் பிறர்க்கு மெய்போலும் பொய் வல்லன் நச்சப்படும் நமக்கு நாகத்து அணையானே (5)

I remained certain that he would never depart from my heart. The Lord with the discus in hand is a master of vast theft; outsiders do not praise him, and he excels at falsehood that appears true. Yet to us he is irresistible—the one upon the serpent-bed.

நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை மாகத்து இள மதியம் சேரும் சடையானைப் பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே (6)

I bowed to the feet of the serpent-couched Master who shows grace to those who embrace him within the heart each day through knowledge. He holds in one part of himself the matted-haired one, whose locks bear the young moon of the sky.

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான் அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே (7)

Heart, worship each day the supreme beyond the supreme, who makes disease unable to approach, destroys birth, and rules. My Master Madhusūdana is a jewel-set Light, bearing a mighty discus of beautiful red gold.

ஆழியான் ஆழி அமரர்க்கும் அப்பாலான் ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான் பாழி அம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே! மறவாது வாழ்கண்டாய் (8)

The discus-bearer is an ocean beyond even the immortals; he abides through dissolution, fashioned the age, and grazed the herds. With mighty, beautiful shoulders he lifted the mountain. Long live his feet! Heart, see that you live without forgetting them.

கண்டேன் கமல மலர்ப் பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினையாயின எல்லாம் தொண்டே செய்து என்றும் தொழுது வழியொழுக பண்டே பரமன் பணித்த பணிவகையே (9)

I beheld the lotus-flower feet. The moment I saw them, every deed split apart and disappeared. Forever performing service, worshiping, and walking in that way—this is the mode of service the supreme Lord commanded from ancient times.

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால் திசைதோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே (10)

With minds united according to rule, the immortals from every direction go each day and bow to Mādhava with incense, lamps, fresh flowers, and water. His refuge is the one support of his own people.

பற்று என்று பற்றி பரம பரம்பரனை மல் திண் தோள் மாலை வழுதி வளநாடன் சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழல் இணையே (11)

Taking as his support the supreme beyond the supreme, Māṟaṉ of the prosperous Pāṇḍya land, devoted to strong-shouldered Māl, spoke a thousand linked antāti. For those who learn these ten, Kaṇṇan’s paired ankleted feet become the one support.