राम
Tiruvāymoḻi
PDF

Book 1 · Decad 9

ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை

Tiruvāymoḻi 1.9 · pāsurams 28792889

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும் எவையும் எவரும் தன்னுளே ஆகியும் ஆக்கியும் காக்கும் அவையுள் தனிமுதல் எம்மான் கண்ண பிரான் என் அமுதம் சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே (1)

These, those, and the things beyond; these people, those people, and all others—he becomes them within himself, brings them forth, and preserves them. The sole source within all, our Kṛṣṇa, my nectar-sweet Lord and Śrī’s bridegroom, surrounds me wherever I am.

சூழல் பலபல வல்லான் தொல்லை அம் காலத்து உலகைக் கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான் ஆழ நெடுங் கடல் சேர்ந்தான் அவன் என் அருகவிலானே (2)

Master of countless designs, Keśava became the Boar in the ancient age and raised the world; my Lord broke the elephant’s tusk. Though heaven’s gods cannot conceive him and he rests upon the deep, long ocean, he is never far from me.

அருகல் இலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நன் மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன் பொரு சிறைப் புள் உவந்து ஏறும் பூமகளார் தனிக் கேள்வன் ஒருகதியின் சுவை தந்திட்டு ஒழிவு இலன் என்னோடு உடனே (3)

The incomparable, ancient source of the immortals has a lovely rain-cloud-dark body and red-lotus eyes. Śrī’s unique consort gladly mounts the battle-winged bird; having given me the taste of the one true goal, he remains inseparably beside me.

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண்மகள் ஆயர் மட மகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே உடன் அவை ஒக்க விழுங்கி ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான் கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே (4)

Three beloved women dwell with him—Śrī, Earth, and the innocent cowherd maiden—and they govern the three worlds. He swallowed all three together and rested on a banyan leaf. That ocean-deep wonder, Kṛṣṇa, is at my side.

ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று தந்திட வாங்கிச் செக்கம் செக அன்று அவள்பால் உயிர் செக உண்ட பெருமான் நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன் என் நெஞ்சின் உளானே (5)

She took him on her hip and offered her breast, saying “Drink.” He received it and sucked until the deceiver’s life was gone. The Lord who brought forth crescent-bearing Hara, Ayan, Indra, and all the rest—that wondrous One is within my heart.

மாயன் என் நெஞ்சின் உள்ளான் மற்றும் எவர்க்கும் அதுவே காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே சேயன் அணியன் எவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணையானே (6)

The wondrous One is inside my heart, and likewise within everyone. He is body and life, wind and fire; far from all and near to all, beyond the mind’s reach. Pure yet bewildering and enchanting, he is the companion of my two shoulders.

தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாள் இணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடை அம்மான் கேள் இணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவின் உளானே (7)

Cool, beautiful tulasī adorns his paired shoulders, broad chest, radiant crown, and twin feet. Matchless kin, a form of leaping light, he has joined me and never leaves; he is present upon my tongue.

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே பூ இயல் நால் தடம் தோளன் பொரு படை ஆழி சங்கு ஏந்தும் காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணின் உளானே (8)

Standing on my tongue, he blossoms as the life and body of every art of knowledge. He creates and destroys. Four broad flower-like arms bear the battle discus and conch; the dark kāyā-flower body and lotus eyes dwell within my eyes.

கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே அமலங்கள் ஆக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி கமலத்து அயன் நம்பி தன்னைக் கண்ணுதலானொடும் தோற்றி அமலத் தெய்வத்தொடு உலகம் ஆக்கி என் நெற்றி உளானே (9)

The lotus-eyed Lord is within my eyes, and through his eyes I see; the five senses awaken as his stainless form. Having brought forth lotus-born Ayan, brow-eyed Hara, the pure gods, and the worlds, he now abides upon my forehead.

நெற்றியுள் நின்று என்னை ஆளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடிக் கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார் ஒற்றைப் பிறை அணிந்தானும் நான்முகனும் இந்திரனும் மற்றை அமரரும் எல்லாம் வந்து எனது உச்சியுளானே (10)

He stands upon my brow and rules me; I wear his clustered flower-feet upon my head. Crescent-crowned Hara, four-faced Brahmā, Indra, and all the other immortals come to worship beautiful Kṛṣṇa, whose crown is dense with tulasī.

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்குக் கண்ண பிரானுக்கு இச்சையுள் செல்ல உணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன் இச் சொன்ன ஆயிரத்துள்ளே இவையும் ஓர் பத்து எம்பிராற்கு நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே (11)

Śaṭhakopa of generous Kurukūr composed this decad within his spoken thousand, following his love for Kṛṣṇa, God of gods, who stands at his crown. Those who offer these ten daily to our Lord will have the long-ankleted feet rest upon their heads.