राम
Tiruvāymoḻi
PDF

Book 1 · Decad 8

ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்

Tiruvāymoḻi 1.8 · pāsurams 28682878

ஓடும் புள் ஏறி சூடும் தண் துழாய் நீடு நின்றவை ஆடும் அம்மானே (1)

He mounts the swift bird, wears cool tulasī, abides through all enduring things, and dances upon the serpent’s heads—our Lord!

அம்மானாய்ப் பின்னும் எம் மாண்பும் ஆனான் வெம் மா வாய் கீண்ட செம் மா கண்ணனே (2)

He became our Master and then our every excellence—the red-lotus-eyed Kṛṣṇa who tore open the savage horse-demon’s mouth.

கண் ஆவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண் ஆர் வேங்கட விண்ணோர் வெற்பனே (3)

Forever he is the very eye of those on earth and those in heaven, the celestial Lord of the cool, water-rich Vēṅkaṭa hill.

வெற்பை ஒன்று எடுத்து ஒற்கம் இன்றியே நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே (4)

Each day I shall learn the glory of my Lord who lifted the mountain and held it aloft without the least fatigue.

வைகலும் வெண்ணெய் கைகலந்து உண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே (5)

Every day he mixed butter in his hands and ate it; without any false mingling, that same Lord has mingled truly with me.

கலந்து என் ஆவி நலம் கொள் நாதன் புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே (6)

The Master mingled with my life and took its welfare; as the captivating Dwarf he took possession of the earth.

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம் தண் தாமம் செய்து என் எண் தான் ஆனானே (7)

He mastered the seven bulls and swallowed the seven worlds. Fashioning a cool garland for me, he became the whole content of my thought.

ஆனான் ஆன் ஆயன் மீனோடு ஏனமும் தான் ஆனான் என்னில் தான் ஆய சங்கே (8)

He became the cowherd among cattle, became Fish and Boar—and if you ask what he became for me: he became the conch itself.

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் எங்கும் தானாய நங்கள் நாதனே (9)

He holds conch and discus in his beautiful hands; he himself has become everything everywhere—our own Master.

நாதன் ஞாலம் கொள் பாதன் என் அம்மான் ஓதம் போல் கிளர் வேத நீரனே (10)

He is the Master whose feet possessed the worlds, my Lord whose nature the Vedas proclaim as surging and measureless as the sea.

நீர்புரை வண்ணன் சீர் சடகோபன் நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே (11)

These are the ten to ponder within Śaṭhakopa’s thousand direct songs on the glory of the Lord whose color is like the waters.