राम
Tiruvāymoḻi
PDF

Book 1 · Decad 7

ஆராதிப்பார்க்கு மிக இனியன்

Tiruvāymoḻi 1.7 · pāsurams 28572867

பிறவித்துயர் அற ஞானத்துள் நின்று துறவிச் சுடர் விளக்கம் தலைப்பெய்வார் அறவனை ஆழிப்படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே (1)

Those who would end the sorrow of birth stand in wisdom and attain the radiant lamp of renunciation. Without forgetfulness they place within the mind the righteous, pure Lord who bears the discus.

வைப்பு ஆம் மருந்து ஆம் அடியரை வல்வினைத் துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன் எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே (2)

He is stored treasure and healing medicine; he will not let the five predatory senses consume his servants through heavy karma. Rising beyond everyone in every direction through his goodness, that transcendent One is the tender shoot of our cowherd clan.

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை தூய அமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே (3)

I drank and drank the wondrous Lord—the cowherds’ darling whom they punished—the gem-radiance, the stainless nectar. Thus I cut away the bewilderment of illusory birth.

மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ? (4)

He settled in my mind and cleared its delusion: a concentrated beam of light that gives the highest good, the ancient source of the tireless immortals, my heart’s own harmony. With what words could I release him?

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரானையே? (5)

Would I release my lamp, my very life—the Master who came between death and me and claimed me for salvation, the Lord who mischievously catches the young cowherd girls’ eyes and leaves them wide with wonder?

பிரா அன் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விரா அய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன் மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ? (6)

As the Boar the Lord split open the great earth; his crown is woven with mingled tulasī blossoms; as the wondrous archer he pierced the seven trees. If he will not remain within me, I shall never consent.

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல் வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே? (7)

I did not first say, “I shall compel him to stay within me.” Of his own accord he came, beguiled my solitary heart, adhered to my flesh, and mingled with my life. Can heaven now agree to loosen him from me?

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடு உடை முன்னை அமரர் முழுமுதல் தானே (8)

Even if he would loosen himself from me, he no longer has the power to leave my faithful heart. He is the primordial source of all the immortals, glorious in the delight of Nappinnai’s long bamboo-like arms.

அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை அமர அழும்பத் துழாவி என் ஆவி அமரத் தழுவிற்று இனி அகலும்மோ? (9)

The ancient source of every immortal, who gave ambrosia to the gods and became the tender cowherd child, searched deeply into me and embraced my soul as his dwelling. Can he ever depart now?

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான் நிகர் இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே (10)

Withdraw, and he withdraws; draw near, and he draws near. Our Lord is hard to enter and no material object. We shall sing his peerless fame without fatigue, plunging and bathing in it by day and night.

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை அடைந்த தென் குருகூர்ச் சடகோபன் மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப் பத்து உடைந்து நோய்களை ஓடுவிக்குமே (11)

Śaṭhakopa of southern Kurukūr reached the Lord whose tulasī crown is pierced by honey-drinking bees and strung this close-woven decad within his thousand. It will break sickness open and drive it away.