राम
Tiruvāymoḻi
PDF

Book 1 · Decad 6

ஆராதனைக்கு எளியவன்

Tiruvāymoḻi 1.6 · pāsurams 28462856

பரிவது இல் ஈசனைப் பாடி விரிவது மேவல் உறுவீர் பிரிவகை இன்றி நல் நீர் தூய் புரிவதுவும் புகை பூவே (1)

Sing the Lord who knows no partiality, you who long to unfold in him. Sprinkle pure water without a break and offer what you can: incense and flowers.

மதுவார் தண் அம் துழாயான் முது வேத முதலவனுக்கு எது ஏது என் பணி என்னாது அதுவே ஆள் செய்யும் ஈடே (2)

To the ancient source of the Vedas, crowned with cool tulasī dripping honey, do not ask, “Which service is mine?” Whatever service lies before you—that itself is the fitting way to serve.

ஈடும் எடுப்பும் இல் ஈசன் மாடு விடாது என் மனனே பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே (3)

The Lord is without equal, increase, or decrease. My mind never leaves his side; my tongue sings only his song; my limbs dance in sacred rapture.

அணங்கு என ஆடும் என் அங்கம் வணங்கி வழிபடும் ஈசன் பிணங்கி அமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையினானே (4)

My body dances as though a divine power possessed it, bowing in worship to the Lord whose splendid nature makes even the celestials contend and babble in wonder.

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் விள்கை விள்ளாமை விரும்பி உள் கலந்தார்க்கு ஓர் அமுதே (5)

He neither accepts nor rejects, neither despises nor clings. For those who enter within and mingle with him—whether they speak or fall silent—he is a singular nectar.

அமுதம் அமரர்கட்கு ஈந்த நிமிர் சுடர் ஆழி நெடுமால் அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே (6)

The great Lord of the blazing, uplifted discus gave ambrosia to the immortals, yet he is sweeter than ambrosia himself—the One who rests upon the long ocean with its rising waves.

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணிசெய்தான் தாள்கள் தலையில் வணங்கி நாள்கள் தலைக்கழிமின்னே (7)

He severed the heads and shoulders of Laṅkā’s king, whose island the broad sea surrounds. Bow your head at his feet and let your appointed days pass in that worship.

கழிமின் தொண்டீர்கள் கழித்துத் தொழுமின் அவனை தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே (8)

Pass beyond all else, servants; having left it, worship him. Such worship destroys the hard karma that followed your path and bestows a prosperity that does not perish.

தரும அரும் பயன் ஆய திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரானார் இருமை வினை கடிவாரே (9)

He is the rare fruit of dharma, the incomparable consort of the Lady Śrī, our Lord of sovereign greatness who cuts away both forms of karma.

கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக்கண் கொடியா அடு புள் உயர்த்த வடிவு ஆர் மாதவனாரே (10)

Lovely Mādhava, who raises the banner of the fierce, conquering bird, will cut away evil deeds within the measure of a single instant.

மாதவன்பால் சடகோபன் தீது அவம் இன்றி உரைத்த ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து ஓத வல்லார் பிறவாரே (11)

Śaṭhakopa spoke these ten without fault or futility to Mādhava, within his flawless thousand. Those able to recite them will not be born again.