राम
Tiruvāymoḻi
PDF

Book 6 · Decad 4

கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்

Tiruvāymoḻi 6.4 · pāsurams 33763386

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும் உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும் பல அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி இரவும் நன் பகலும் தவிர்கிலன் என்ன குறை எனக்கே? (1)

He joined the cowherd women in their linked kuravai dance, lifted the mountain, and subdued the serpent in the deep, surging pool—along with countless other deeds. Night and bright day I cannot cease crying out the wondrous acts of the Lord who reclines upon the serpent. What deficiency can remain for me?

கேயத் தீம் குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண் கண் வாசப் பூங் குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல மாயக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ் உலகம் நிகரே? (2)

He played the sweet, melodious flute, tended the herd, and embraced the shoulders of fragrant-haired Nappiṉṉai, whose bright eyes resemble darting fish—along with so much more. Whenever my mind dissolves in loving remembrance of the wondrous Lord’s deeds, what world could equal me?

நிகர் இல் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடும் கைச் சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும் புகர்கொள் சோதிப் பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே? (3)

He slew the peerless wrestlers, grazed the herd, and felled the towering elephant with its great, long trunk—these and numberless other acts. I have received the daily delight of lamenting always in remembrance of the radiant, celebrated Lord’s deeds. What pain can touch me now?

நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச் சாவப் பால் உண்டதும் ஊர் சகடம் இறச் சாடியதும் தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே? (4)

He pitied his mother when she painfully bound him to the mortar; he drank the deceitful woman’s milk until she died, and kicked the village cart to destruction. My heart melts as I remember the deeds of that divinely beautiful Lord, and the seasons have joined so that I may dwell in him. What more could I desire?

வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கு இருள்வாய் பூண்டு அன்று அன்னைப் புலம்ப போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் காண்டல் இன்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும் ஈண்டு நான் அலற்றப்பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே? (5)

At the gods’ entreaty he came and was born; through swelling darkness he departed while his mother lamented and entered a cowherd clan. Growing beyond the enemy’s sight, he devised the means by which Kaṃsa would perish. I have been granted the joy of crying these deeds aloud—what hostility can remain for me?

இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமில் ஏறுகள் செற்றதுவும் உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் உட்பட மற்றும் பல அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே பகல் இராப் பரவப் பெற்றேன் எனக்கு என்ன மனப் பரிப்பே? (6)

He tore apart the hostile bird, destroyed the mighty humped bulls, and broke the kuruntu trees rising in the lofty grove—these and many more. Day and night I have been granted praise of the wonders of my Father, the mysterious one who measured the broad earth. What anguish of mind can remain?

மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து தனக்கு வேண்டு உருக்கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும் புனத் துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன் தன் மாயங்களே நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே? (7)

With inward concern he was himself born among the impure race of mortals, assuming whatever body he desired and bringing his own wrath to its appointed end. My heart contemplates the wonders of my Father, whose chest bears a garland and whose crown is wild tulasī. Who on this wide earth can equal me now?

நீள் நிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல மாணி ஆய் நிலம் கொண்ட மாயன் என் அப்பன் தன் மாயங்களே காணும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே? (8)

He fought great, consummate wars that left broad earth and heaven astonished; he severed Bāṇa’s thousand arms—these and countless other deeds. My heart beholds the wonders of my Father, the mysterious dwarf who took possession of the earth. What confusion can trouble me now?

கலக்க ஏழ் கடல் ஏழ் மலை உலகு ஏழும் கழியக் கடாய் உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும் பல வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை உடை மால்வண்ணனை மலக்கும் நா உடையேற்கு மாறு உளதோ இம் மண்ணின் மிசையே? (9)

He drove all seven oceans, seven mountains, and seven worlds through their final dissolution; he performed the wonder of advancing with the devastating chariot, and much besides. My tongue pours out praise of the dark Great One who bears the discus in his right hand and the conch in his left. Can anything oppose me upon this earth?

மண்மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற்றிட்டுப் போய் விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வணங்கப்பெற்றேன் எனக்கு ஆர் பிறர் நாயகரே? (10)

To relieve the earth’s enormous burden, he brought about the vast Bhārata war, worked his wonders, and arranged the army’s destruction; then the radiant one chose to enter his own celestial abode. I have been allowed to approach and worship his feet. Who else could ever be my master?

நாயகன் முழு ஏழ் உலகுக்கும் ஆய் முழு ஏழ் உலகும் தன் வாயகம் புக வைத்து உமிழ்ந்து அவை ஆய் அவை அல்லனும் ஆம் கேசவன் அடி இணைமிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன தூய ஆயிரத்து இப் பத்தால் பத்தர் ஆவர் துவள் இன்றியே (11)

The Lord of all seven worlds draws all seven into his mouth, releases them again, becomes them, and is other than them. Upon Keśava’s paired feet Caṭakōpa of Kurukūr spoke a pure thousand. Through these ten, those who recite them become his devotees without the least faltering.