राम
Tiruvāymoḻi
PDF

Book 10 · Decad 9

திருநாடு செல்வாருக்கு நடைபெறும் உபசாரங்களைத் தாமே அனுபவித்துப் பேசுதல்

Tiruvāymoḻi 10.9 · pāsurams 38713881

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின ஆழ் கடல் அலை திரைக் கை எடுத்து ஆடின: ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன் வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே (1)

The beautiful clouds in the encircling sky thundered instruments; the deep ocean raised wave-hands and danced. Seeing the servants of famed Nārāyaṇa, my Father who bears the abundance of all seven worlds, they rejoiced.

நாரணன் தமரைக் கண்டு உகந்து நல் நீர் முகில் பூரண பொன் குடம் பூரித்தது உயர் விண்ணில் நீர் அணி கடல்கள் நின்று ஆர்த்தன நெடு வரைத் தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே (2)

Seeing Nārāyaṇa’s servants, fine water-clouds rejoiced and filled the lofty sky like brimming golden ceremonial pots. Water-adorned oceans stood roaring, festoons lined the long mountains, and the worlds worshiped everywhere.

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள் வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே (3)

The worlds worshiped; incense and a rain of fine flowers poured before the servants of him who once measured earth. Sages came to meet them, singing from both sides, “Rise! This is the road to Vaikuṇṭha.”

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர் அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே (4)

Immortals facing them arranged place after place to rest; radiant suns pointed the way, each with ranks of hands. Drums with trembling voices sounded like the roaring wave-filled sea—all for the servants of Mādhava, crowned with tulasī spreading honey.

மாதவன் தமர் என்று வாசலில் வானவர் போதுமின் எமது இடம் புகுதுக என்றலும் கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் வேத நல் வாயவர் வேள்வி உள்மடுத்தே (5)

At their thresholds, celestials cried, “They are Mādhava’s servants! Come, enter our dwelling.” Kinnaras and Garuḍas sang songs, while fine Vedic tongues performed the sacrifice within.

வேள்வி உள்மடுத்தலும் விரை கமழ் நறும் புகை காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர் ஆள்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே (6)

As sacrifice was offered within, sweetly fragrant smoke spread, and great horns and right-turning conches sounded together everywhere. Sword-bright-eyed women rejoiced and blessed them: “You are servants of the discus-bearer—rule the heavenly realm!”

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல் கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணிமுடி குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே (7)

As the maidens blessed them, Maruts and Vasus followed everywhere, reciting hymns for the hereditary servants of our Keśava—our crowned, jewel-radiant cowherd Lord of Kuṭantai, reclining upon the surrounding ocean.

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று முடி உடை வானவர் முறை முறை எதிர்கொள்ள கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே (8)

“These are Govinda’s hereditary servants.” Crowned celestials received them in due succession. They approached long, bannered walls and towers to enter the Vaikuṇṭha of beautiful Mādhava.

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே (9)

As they entered Vaikuṇṭha, celestials at the gate cried, “Vaikuṇṭha’s servants are our own! Enter our dwelling.” Immortals and sages within Vaikuṇṭha marveled: entering Vaikuṇṭha is the destined fortune of people born on earth.

விதிவகை புகுந்தனர் என்று நல் வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே (10)

“They have entered according to destiny.” Noble Vedic hosts washed their feet within the city’s proper precincts. Moon-faced women came bearing treasure, fine fragrant powder, brimming ceremonial pots, and lamps.

வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை கொந்து அலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே (11)

They came and received them; in the great jeweled hall, the newcomers sat among servants within endless supreme bliss. Those who master these among the thousand metrical verses spoken by Caṭakōpa of flower-groved Kurukūr are sages themselves.