राम
Tiruvāymoḻi
PDF

Book 10 · Decad 1

திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல் (திருமோகூர்)

Tiruvāymoḻi 10.1 · pāsurams 37833793

தாள தாமரைத் தடம் அணி வயல் திருமோகூர் நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும் தோளும் நான்கு உடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்க் காளமேகத்தை அன்றி மற்றொன்று இலம் கதியே (1)

He abides every day in sacred Mōgūr, beautifully ornamented by broad lotus-filled fields, firmly established and shattering asuras: Kāḷamēgha, dark as storm cloud, with four shoulders, curling hair, lotus eyes, and fruit-red mouth. Apart from him, we have no other way.

இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின் அலங்கல் அம் கண்ணி ஆயிரம் பேர் உடை அம்மான் நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திருமோகூர் நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே (2)

For all time we have no other way than the broad shade beneath his gracious ankleted feet. The Master of a thousand names wears a beautiful garland of fresh cool tulasī; he dwells in sacred Mōgūr, home of noble masters of the four excellent Vedas.

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட வென்று இம் மூவுலகு அளித்து உழல்வான் திருமோகூர் நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே (3)

Again and again four-faced Brahmā, Hara, and the gods stand crying, “Apart from you, we have no place of refuge,” and seek him. He conquers, protects the three worlds he measured, and roams through them. Let us now draw near good sacred Mōgūr, so our distress may perish.

இடர் கெட எம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர படர் கொள் பாம்பு அணைப் பள்ளி கொள்வான் திருமோகூர் இடர் கெட அடி பரவுதும் தொண்டீர்! வம்மினே (4)

“Come to us in mercy so distress may end!” The gods and sages praise and follow the radiant Light. He reclines upon the spreading serpent-bed in sacred Mōgūr. Servants, come—let us praise his feet so distress may perish.

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் அண்டம் மூவுலகு அளந்தவன் அணி திருமோகூர் எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளையக் கொண்ட கோயிலை வலஞ்செய்து இங்கு ஆடுதும் கூத்தே (5)

Servants, come! Our peerless primal one is radiant light; he measured the cosmic sphere and the three worlds. In beautiful sacred Mōgūr, sugarcane and great red paddy flourish through all eight directions. Let us circle the temple he has taken and dance our dance here.

கூத்தன் கோவலன் குதற்று வல் அசுரர்கள் கூற்றம் ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன் வாய்த்த தண் பணை வள வயல் சூழ் திருமோகூர் ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே (6)

He is the dancer, the cowherd, and death to the fierce, snarling asuras; joy to us who praise, to immortals, and to sages. Apart from the lotus feet of the first Lord of sacred Mōgūr, surrounded by fertile fields and cool, well-watered land, we have no other fortress.

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலாச் சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா முற்றும் தேவரோடு உலகுசெய்வான் திருமோகூர் சுற்றி நாம் வலஞ் செய்ய நம் துயர் கெடும் கடிதே (7)

We have no other fortress. Beginning with the vast empty heavens and solitary first principle, he fashioned the encircling waters; after them the primordial sages, all the gods, and the worlds. If we circle sacred Mōgūr where he dwells, our sorrow will quickly perish.

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின் உயர் கொள் சோலை ஒண் தடம் அணி ஒளி திருமோகூர் பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே (8)

Sorrow will quickly perish. Servants, approach, come, and worship the son of Daśaratha—the broad emerald jewel in radiant sacred Mōgūr, ornamented by shining pools and towering groves—he of a thousand names, into whom mighty rākṣasas enter only to sink.

மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய் அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும் துணிக்கும் வல் அரட்டன் உறை பொழில் திருமோகூர் நணித்து நம்முடை நல் அரண் நாம் அடைந்தனமே (9)

Jewel-like feet, lotus-flower eyes, coral-red mouth, and four broad ornamented shoulders—the divine mighty king who forever cuts down asuras dwells in grove-filled sacred Mōgūr. It is near; we have reached our good fortress.

நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர் தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சிச் சென்று அடைந்தால் காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர் நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள் (10)

“This is the good fortress we have reached.” When noble immortals, fearing powerful asuras who did them harm, sought refuge there, he rose in whatever form they desired and protected them. Our people, recite, contemplate, and praise the very name of sacred Mōgūr.

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடம் ஆடு கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் வாய்த்த ஆயிரத்துள் இவை வண் திருமோகூர்க்கு ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே (11)

“Praise him, our people!” Upon the Lord who dances with pots, Caṭakōpa of Kurukūr spoke a thousand acts of service. These ten within them he offered to bountiful sacred Mōgūr. Distress will perish for those able to praise through them.