राम
Tiruvāymoḻi
PDF

Book 1 · Decad 4

தலைமகள் தூதுவிடல்

Tiruvāymoḻi 1.4 · pāsurams 28242834

அம் சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின் அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி வெம் சிறைப் புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால் வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ? (1)

Gentle crane with lovely wings, take pity: you and your beautiful-winged mate must carry my message to the Lord whose banner bears the fierce-winged bird. If he keeps you in a hard prison there, what harm would such blessed captivity do?

என் செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய் என் செய்யும் உரைத்தக்கால்? இனக் குயில்காள் நீர் அலிரே? முன் செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ? விதியினமே (2)

Cuckoos, will you not go as my messengers to my red-lotus-eyed Lord? Tell him: “Because of all her former deeds, must one who failed then to seek service beneath your feet now be cast away? Is this truly her fate?”

விதியினால் பெடை மணக்கும் மென்நடைய அன்னங்காள் மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு மதியிலேன் வல் வினையே மாளாதோ? என்று ஒருத்தி மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே (3)

Soft-stepping swans who by good fortune move beside your mates, tell the clever Dwarf who begged the worlds: “A witless girl, burdened by stubborn karma, has lost all composure; every faculty within her reels in bewilderment.”

என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத என் நீல முகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ? நன் நீர்மை இனி அவர்கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல் நன் நீல மகன்றில்காள் நல்குதிரோ? நல்கீரோ? (4)

Blue anril birds, what words can I send to my rain-cloud-dark Lord, who sees my state yet does not pity me and say, “This is not fitting”? Will you grant me one good message: “Her life can no longer remain apart from you”?

நல்கித் தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே நல்கத் தான் ஆகாதோ? நாரணனைக் கண்டக்கால் மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே (5)

Little waterbird seeking food in rich, flooded fields, when you see Nārāyaṇa ask him: “You graciously preserve all seven worlds—can you not also show grace to her?” Bring one word back to these eyes overflowing with tears.

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவராமுன் அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே? (6)

Striped bee, be gracious where he is not: reach the Lord of the gracious discus and tell him, “Before her life dries away, come for one day along her street upon your eagle.” What fault have I committed that we are left like this?

என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்றது என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல் என்பிழைக்கும்? இளங் கிளியே யான் வளர்த்த நீ அலையே? (7)

Young parrot whom I raised, the cold wind cuts through me as though threading my bones. Ask Tirumāl, who remembers some fault and withholds grace: “What wrong has she done against the refuge of your feet?” What could you lose by speaking one word?

நீ அலையே? சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய் நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய் சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே (8)

Little pūvai bird, are you not the one I sent to the great Lord to tell him of my sickness? You stayed silent. My beauty and jewel-bright complexion have withered; now seek another who will place sweet rice in your beak.

நாடாத மலர் நாடி நாள்தோறும் நாரணன் தன் வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ? ஊடாடு பனி வாடாய் உரைத்து ஈராய் எனது உடலே (9)

Every day he appoints fresh flowers to be sought and laid beneath Nārāyaṇa’s unfading flower-feet. Yet I sit outside release, my deeds unended. O cold wind moving through the dew, carry the tale and tear at my body too.

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்க் கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண்வளரும் அடல் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி விடல் ஆழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே (10)

O foolish heart, if you see the mighty Lord of the discus, who became body, birth, release, life, and every first principle, who brought forth the ocean and rests upon it, tell him: “We are indeed bound by deeds—yet are we uniquely so?”

அளவு இயன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின் வள உரையால் பெறலாகும் வான் ஓங்கு பெரு வளமே (11)

Śaṭhakopa of generous Kurukūr, encircled by fertile fields, sang this measured decad within his thousand linked verses on Kṛṣṇa, Lord of the seven worlds. Its abundant words bestow the vast treasure that rises to heaven.