राम
Tiruvāymoḻi
PDF

Book 5 · Decad 9

திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல் (திருவல்லவாழ்)

Tiruvāymoḻi 5.9 · pāsurams 33213331

மான் ஏய் நோக்கு நல்லீர் வைகலும் வினையேன் மெலிய வான் ஆர் வண் கமுகும் மது மல்லிகை கமழும் தேன் ஆர் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை அடியேன் அடிகூடுவது என்றுகொலோ? (1)

Doe-eyed good friends, while this karmic woman weakens every day, when will this servant’s feet join the King dwelling at sacred Vallavāḻ, ringed by honey-rich groves fragrant with jasmine and generous areca palms rising toward heaven?

என்று கொல் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ? பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி தென்றல் மணம் கமழும் திருவல்லவாழ் நகருள் நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே? (2)

When, friends? What do you accomplish by tormenting us? When shall we servants take and wear dust from the feet of the Lord standing in Vallavāḻ, where breezes carry fragrance from fresh mādhavī climbing gold-bright puṉṉai and makiḻ trees?

சூடு மலர்க்குழலீர் துயராட்டியேன் மெலிய பாடும் நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும் தண் திருவல்லவாழ் நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும்கொல் நிச்சலுமே? (3)

Flower-haired friends, while I—played upon by sorrow—grow weak, shall I surely see the ankleted feet of the enduring Lord at cool sacred Vallavāḻ, where noble Vedic chant roars like ocean waves and sacrificial smoke rises above tall mansions?

நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ? பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் மச்சு அணி மாடங்கள் மீது அணவும் தண் திருவல்லவாழ் நச்சு அரவின் அணைமேல் நம்பிரானது நல் நலமே (4)

Good friends, every day you torment us—what do you gain? My welfare lies with our Lord upon the venomous serpent couch at cool sacred Vallavāḻ, where green-leaved tall areca, jackfruit, coconut, and plantain touch the ornamented upper stories.

நல் நலத் தோழிமீர்காள் நல்ல அந்தணர் வேள்விப் புகை மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ் கன்னல் அம் கட்டி தன்னை கனியை இன் அமுதம் தன்னை என் நலம் கொள் சுடரை என்றுகொல் கண்கள் காண்பதுவே? (5)

Friends of noble goodness, when shall my eyes see the Radiance who has taken my welfare—beautiful block of sugar, fruit, sweet nectar—at sacred Vallavāḻ, where dark sacrificial smoke from good brahmins rises in strength and hides high heaven?

காண்பது எஞ்ஞான்றுகொலோ வினையேன் கனிவாய் மடவீர் பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலும் ஆகி எங்கும் சேண் சினை ஓங்கு மரச் செழுங் கானல் திருவல்லவாழ் மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே? (6)

Fruit-mouthed innocent friends, when will this karmic woman see the flower-lotus feet of the Lord in lovely dwarf-form at sacred Vallavāḻ, whose rich groves carry sky-high branches, where green breeze moves everywhere beside musically humming bees?

பாதங்கள்மேல் அணி பூந் தொழக் கூடுங்கொல் பாவை நல்லீர் ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர் மாதர்கள் வாள் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ் நாதன் இஞ் ஞாலம் உண்ட நம் பிரான் தன்னை நாள்தொறுமே? (7)

Doll-like good friends, when shall we daily join and worship with flowers adorning the feet of our Lord who swallowed this world—the Master at sacred Vallavāḻ, where tall lotuses and red water-lilies in broad rippling ponds raise women’s radiant faces and eyes?

நாள்தொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல் நல் நுதலீர் ஆடு உறு தீங் கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும் மாடு உறு பூந் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ் நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே? (8)

Bright-browed friends, when may I worship without a day’s interval the Lord’s long ankleted feet that strode across the earth? He dwells forever at cool sacred Vallavāḻ, encircled by fields of swaying sweet sugarcane and red rice beside large flower-filled ponds.

கழல் வளை பூரிப்ப யாம் கண்டு கைதொழக் கூடுங்கொலோ குழல் என்ன யாழும் என்ன குளிர் சோலையுள் தேன் அருந்தி மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ் சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல் அருளே? (9)

When shall we see, bow with joined hands, and have our arm-bangles fill again through the ancient grace of the discus Lord at sacred Vallavāḻ, where striped bees drink honey in cool groves and sing childish music like flute and yāḻ?

தொல் அருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள் தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம் நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ் நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே? (10)

Friends, when will good karma let us speak the Names of our gracious Lord Nārāyaṇa at sacred Vallavāḻ, bearer of ancient grace, a holy city worshipped by earth and heaven, where a thousand grace-filled Vedic ones uphold goodness?

நாமங்கள் ஆயிரம் உடைய நம் பெருமான் அடிமேல் சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ் சேமம் கொள் தென் நகர்மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே (11)

Śaṭhakopa of secure southern Kurukūr clearly spoke this decad within his thousand names upon the feet of our Lord who owns a thousand Names, praising protected southern sacred Vallavāḻ. Those who recite it are born as the excellent.